ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தாமாகவே வருகைப் பதிவு செய்யும் பள்ளி மாணவர்கள்! ஆசிரியைக்கு குவியும் பாராட்டு!

தில்லியில் சொந்தமாக மாணவர்கள் வருகைப் பதிவு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறித்து...

School students mark their own attendance Teacher receives a flood of praise

வருகைப் பதிவு செய்யும் மாணவர்கள் - இன்ஸ்டாகிராம்

Published On :28 ஜூலை 2026, 10:07 pm IST

தில்லியில் சொந்தமாக மாணவர்கள் வருகைப் பதிவு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியையின் தனிப்பட்ட முயற்சிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தில்லியில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவர்களின் செயல்திறனை ஊக்குவிக்கும் வகையில் வித்தியாசமாக வருகைப் பதிவை மேற்கொண்டு வருகிறார்.

ஒவ்வொருவரின் பெயரை அழைத்து வருகைப் பதிவு செய்வதற்கு பதிலாக, மாணவர்களே தாமாக வருகைப் பதிவு செய்துகொள்ளும் வகையில் சிந்தித்துள்ளார்.

அதாவது தீப்பெட்டி அட்டைப் பெட்டியில் மாணவர்களின் புகைப்படங்களை ஒட்டி, அதனை சுவற்றில் மாட்டியுள்ளார். அதில் மாணவர்களின் புகைப்படங்களுடன் பெயர்களுடம் இடம்பெற்றுள்ளன. தீப்பெட்டியை திறக்கும் வகையில் அதனை மேல்புறம் நகர்த்தினால் வருகைப் பதிவாகும்.

சின்னஞ்சிறு பிள்ளைகள் பொறுப்பேற்றுக்கொள்கிறார்கள் என இது தொடர்பான விடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் சிறு வயதிலேயே மாணவர்களை ஒரு செயலில் ஈடுபடுத்தும் வகையிலான ஆசிரியையின் முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பணத்திற்காக அல்லாமல், ஒரு வேலையை பிடித்துச் செய்தால் அது எப்படி இருக்கும் என்பதற்கு இந்த ஆசிரியையின் செயல் எடுத்துக்காட்டாக உள்ளதாக சமூக வலைதளப் பக்கத்தில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

Summary

School students mark their own attendance Teacher receives a flood of praise

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.