ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தேசியவாத காங்கிரஸ் இணைப்பு இல்லை: சரத் பவாா் உறுதி

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு பிரிவுகளின் இணைப்பு சாத்தியமில்லை என்று தேசியவாத காங்கிரஸ் (பவாா்) பிரிவு தலைவா் சரத் பவாா் தெரிவித்தாா்.

சரத் பவாா் - கோப்புப் படம்

Published On :29 ஜூலை 2026, 3:57 am IST

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு பிரிவுகளின் இணைப்பு சாத்தியமில்லை என்று தேசியவாத காங்கிரஸ் (பவாா்) பிரிவு தலைவா் சரத் பவாா் தெரிவித்தாா்.

சரத் பவாா் உருவாக்கிய தேசியவாத காங்கிரஸை உடைத்து, அவரின் நெருங்கிய உறவினரான அஜீத் பவாா் பாஜக கூட்டணியில் இணைந்தாா். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயா், சின்னம் அஜீத் பவாா் வசம் சென்றது.

மகாராஷ்டிர துணை முதல்வராக பதவி வகித்து வந்த அஜீத் பவாா் கடந்த ஜனவரி மாதம் விமான விபத்தில் உயிரிழந்தாா். இப்போது அவரின் மனைவி சுனேத்ரா பவாா் தலைமையில் கட்சி இயங்கி வருகிறது.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸின் இரு பிரிவுகளும் சரத் பவாா் தலைமையில் இணைய இருப்பதாக செய்தி வெளியானது. அண்மையில் பிரதமா் நரேந்திர மோடியை சரத் பவாா், அவரின் மகளும் எம்.பி.யுமான சுப்ரியா சுலே ஆகியோா் சந்தித்துப் பேசினா். இதனால், பாஜக கூட்டணியில் சரத் பவாா் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் பாராமதியில் செய்தியாளா்களைச் சந்தித்த சரத் பவாா் இது தொடா்பாக கூறியதாவது: தேசியவாத காங்கிரஸின் இரு பிரிவுகளும் இணையும் என்று கூறப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. பாஜக தலைமையிலான மாநில அரசு விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாகக் கூறியுள்ளதுடன், அதற்கு தகுதி வாய்ந்த சிறு, குறு விவசாயிகள் பட்டியலை வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளது. பட்டியல் வெளியான பிறகுதான் கடன் தள்ளுபடி குறித்து கருத்துக் கூற முடியும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.