ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நிலச்சரிவால் சார்தாம் யாத்திரை இரு நாள்கள் நிறுத்தம்!

உத்தரகாண்டில் கனமழை காரணமாக சார்தாம் யாத்திரை இரு நாள்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Chardham Yatra

சார்தாம் யாத்திரை - கோப்புப் படம்

Published On :28 ஜூலை 2026, 12:33 pm IST

உத்தரகாண்டில் கனமழை காரணமாக சார்தாம் யாத்திரை இரு நாள்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக யாத்திரை செல்லும் வழிப் பாதைகள் தடைபட்டு, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சார்தாம் யாத்திரை இரு நாள்கள் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பக்தர்களின் பாதுகாப்பைக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கார்வால் பகுதி ஆணையர் ஆனந்த் ஸ்வரூப் கூறினார். மேலும், “தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் யாத்திரை மேற்கொள்ளும் பாதையில் பல பகுதிகள் தடைபட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் கனமழை வர வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது. வழிப் பாதை சீரமைக்கப்பட்டு, வானிலை இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னர் சார்தாம் யாத்திரை மீண்டும் தொடரும்” என்றும் அவர் தெரிவித்தார்.

உத்தரகாண்ட் முழுவதும் நேற்று முதல் பெய்து வரும் தொடர் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதில், யமுனோத்ரி செல்லும் யாத்திரைப் பாதை சேதமடைந்துள்ளது. அதேபோல, பல மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் புதன் வரை மூடப்படுவதாக அறிவித்துள்ளனர்.

உத்தரகாசி மாவட்டத்தில் யமுனோத்ரிக்கு செல்லும் பாதையின் ஒரு பகுதி, ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால் இடிந்து விழுந்தது. ராமர் கோவிலுக்கு அருகேயுள்ள இப்பகுதி சேதமடைந்ததால் அவ்வழியே பக்தர்கள் செல்வது பாதுகாப்பற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Summary

The Char Dham Yatra in Uttarakhand has been suspended for two days due to heavy rains.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.