ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கேரளத்தில் அமீபா மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!

கேரளத்தில் அமீபா மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Man dies of brain fever in Kerala
Published On :27 ஜூலை 2026, 3:49 pm IST

கேரளத்தில் அமீபா மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பால் 49 வயது நபர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அவர் பலியானதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது, பிஜுவுக்கு ஜூலை 23 ஆம் தேதி மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். அவருக்கு இந்தத் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் ஜூலை 25 வரை 154 மூளைக் காய்ச்சல் பாதிப்புகளும், 40 உயிரிழப்புகளும் பதிவாகியிருந்ததாக கேரள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தற்போது பிஜுவின் மறைவைத் தொடர்ந்து, பலியானோரின் எண்ணிக்கை 41 ஆக உயர்த்துள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் 13 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இந்த மாதத்தில் ஏற்கெனவே 3 பேர் மூளைக்காய்ச்சலுக்கு பலியாகியிருந்த நிலையில், தற்போதைய பலியையும் சேர்த்து ஜூலை மாத பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

Summary

A 49-year-old man undergoing treatment for amoebic meningoencephalitis died at the Government Medical College Hospital here on Monday, health officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.