ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பாகிஸ்தான் அத்துமீறினால் கற்பனைக்கு அப்பாற்பட்ட பதிலடி கொடுக்கப்படும்: ராஜ்நாத் சிங்

கார்கில் போர் நினைவிடத்தில் நடைபெற்ற 27-வது கார்கில் வெற்றி தின நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியவை.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் - X

Published On :26 ஜூலை 2026, 4:57 pm IST

கார்கில் போர் நினைவிடத்தில் நடைபெற்ற 27-வது கார்கில் வெற்றி தின நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.

அங்கு அவர் உரையாற்றுகையில், "கார்கில் வெற்றி என்பது வெறும் ராணுவ வெற்றி மட்டுமல்ல. நமது வீரர்களின் அசைக்க முடியாத துணிச்சலையும் வீரத்தையும் வெளிப்படுத்திய வெற்றி இது. இன்று 27-வது கார்கில் வெற்றி தினத்தில் நமது வீரர்களையும் அவர்களின் வீரத்தையும் நான் வணங்குகிறேன்“ என்று பேசினார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக தொடங்கப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை நினைவு கூர்ந்த ராஜ்நாத் சிங், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை இந்த நடவடிக்கை பிரதிபலிப்பதாகப் பேசினார்.

மேலும், "பயங்கரவாதத்தால் இந்தியாவை அச்சுறுத்த நினைப்பவர்களின் கதி என்னவாகும் என்பதை 'ஆபரேஷன் சிந்தூர்' வெளிக்காட்டியது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் அதே கதியைச் சந்திக்கும்.

பாகிஸ்தானின் எந்தவொரு அத்துமீறலுக்கும் அவர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்ட வகையில் பதிலடி கொடுக்கப்படும். அதற்கான திறன் இந்தியாவிற்கும் நமது ஆயுதப் படைகளுக்கும் உள்ளது.

நம்மீது தாக்குதல் நடத்த நினைப்பவர்களின் வீடுகளுக்கே சென்று தாக்குவோம். பயங்கரவாதத்தை அரசு கொள்கையாக பாகிஸ்தான் கொண்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தைத் தவிர வேறு எந்தப் பேச்சுவார்த்தையும் பாகிஸ்தானுடன் இருக்காது. இருதரப்பு உறவுகள் தொடர்பான நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

நாம் புதிய கண்டுபிடிப்புகளுக்கான வழிகளைத் தேடுகையில், ​​பாகிஸ்தான் அத்துமீறலுக்கான புதிய வழிகளைத் தேடுகிறது. இந்தியா தரவு மையங்களை உருவாக்கினால், ​​பாகிஸ்தான் தீவிரவாத மையங்களை உருவாக்குவதில் ஆர்வமாக உள்ளதன்” என்று தெரிவித்தார்.

Summary

If Pakistan commits any transgression, a retaliation beyond imagination will be delivered: Rajnath Singh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.