ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வாட்ஸ் ஆப்பில் பூமர்களை தடைசெய்ய வேண்டும்: சசி தரூர் மகன் கிண்டல்

வாட்ஸ் ஆப்பில் பூமர்களை தடைசெய்ய வேண்டும் என சசி தரூர் எம்.பி.யின் மகன் இஷான் தரூர் கூறியிருப்பது குறித்து...

Ban Boomers On WhatsApp

வாட்ஸ் ஆப்பில் பூமர்கள் தடை குறித்து... - பிரதிப் படம்

Published On :26 ஜூலை 2026, 5:49 pm IST

வாட்ஸ் ஆப்பில் பூமர்களை தடைசெய்ய வேண்டும் என சசி தரூர் எம்.பி.யின் மகன் இஷான் தரூர் கூறியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் 15 வயதுக்குள்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டதைப்போல, இந்தியாவிலும் தடை விதிக்க வேண்டும் என ஸோஹோ இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறினார்.

ஸ்ரீதர் வேம்புவின் இந்தக் கருத்தைக் குறிப்பிட்டு, காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மகன் இஷான் தரூர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இந்தியா அதனைச் செய்வதற்கு முன்பாக, பூமர் தலைமுறையினர் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவதைத் தடைசெய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இதனிடையே, தனது மகன் இஷான் தரூரின் எக்ஸ் பதிவுக்கு பதிலளித்து சசி தரூர் கூறியிருப்பதாவது, "அப்படியெனில், உன்னுடைய தலைமுறை உள்பட ஒவ்வொரு தலைமுறையும் பேபி பூமர்கள் தலைமுறைக்குள் அடங்கும்" என்று தெரிவித்துள்ளார்.

Summary

Ban Boomers On WhatsApp, Says Shashi Tharoor's Son Ishaan Tharoor

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.