ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இளைஞர்களுக்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி: சரத் பவார்

தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா குறித்து சரத் பவார்.....

 Sharad Pawar

சரத் பவார் - கோப்புப் படம்

Published On :25 ஜூலை 2026, 4:15 pm IST

தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா, நாட்டின் இளைஞர் சக்தியின் ஒற்றுமைக்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி) தலைவர் சரத் பவார் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தில்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து 28 நாட்களாக இளைஞர்கள் காட்டிய போராட்டமும் உறுதியும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்று அவர் கூறினார்.

மேலும் போராட்டக்காரர்களின் தீவிர கோரிக்கைக்கு இணங்க, மத்திய கல்வி அமைச்சர் இறுதியாக இன்று ராஜிநாமா செய்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராடி வருகின்றனர்.

ஜந்தர் மந்தரிலிருந்து கடந்த ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற சிஜேபி ஆதரவாளர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதோடு கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர்.

இதில் இரு தரப்பினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, போலீஸின் செயலைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்த நிலையில், வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்பதாகக் கூறி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இதற்கான கடிதத்தை பிரதமர் மோடிக்கும் அனுப்பியுள்ளார்.

Summary

NCP (SP) president Sharad Pawar on Saturday said Union Education Minister Dharmendra Pradhan's resignation is a major victory for the unity of youth power and democracy in the country.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.