ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பாஜக அரசை அகற்றும் நேரம் வந்துவிட்டது! - ராகுல் காந்தி!

தர்மேந்திர பிரதான் பதவி விலகியது நமது கல்வித்துறையில் மாபெரும் முன்னேற்றம் என ராகுல் காந்தி கருத்து...

Rahul Gandhi

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி - கோப்புப் படம்

Published On :25 ஜூலை 2026, 5:31 pm IST

தர்மேந்திர பிரதான் பதவி விலகியது இந்திய கல்வித்துறையில் மாபெரும் முன்னேற்றம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டுமென கரப்பான்பூச்சி மக்கள் கட்சி, மாணவர் அமைப்புகள் மற்றும் சங்கங்கள் தலைமையில் நாட்டின் பல்வேறு நகரங்களிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் கடந்த சில வாரங்களாகப் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் இன்று (ஜூலை 25) ராஜிநாமா செய்துள்ளார். இதனால், ஜந்தர் மந்தர் உள்பட நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வரும் மாணவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தர்மேந்திர பிரதான் பதவி விலகியது நமது கல்வித்துறையில் மாபெரும் முன்னேற்றம் எனவும், நாடு முழுவதும் உள்ள மாணவர்களை நினைத்து பெருமையடைவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

“தர்மேந்திர பிரதான் பதவி விலகியது நமது கல்வித்துறையை மறுவடிவமைப்பதற்கான மாபெரும் முதல்படி. நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் சிறப்பாகச் செயல்பட்டு உள்ளனர். உங்களை நினைத்து நாங்கள் அனைவரும் பெருமையடைகிறோம்.

ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் தங்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காகத் தெருக்களில் இறங்கி போராடிய ஒவ்வொரு இளைஞருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இன்னும் 2 நிபந்தனைகள் உள்ளன, மாணவர்களுக்கும், இந்தியாவின் எதிர்காலத்துக்கும் மரியாதை அளித்து பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும். மாணவர்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்த அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. எதற்கும் அஞ்சாதீர்கள்” எனக் கூறியுள்ளார்.

Summary

Rahul Gandhi has stated that Dharmendra Pradhan's resignation marks a major advancement for the Indian education sector.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.