ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிஜேபி போராட்டத்திற்கு ஆதரவு: அன்னா ஹசாரே மௌனப் போராட்டம்!

சிஜேபி போரட்டத்துக்கு ஆதரவாக களமிறங்கும் அன்னா ஹசாரே பற்றி..

anna Hazare maun andolan

அன்னா ஹசாரே மௌனப் போராட்டம் - X

Published On :23 ஜூலை 2026, 2:59 pm IST

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மகாராஷ்டிரத்தின் அஹில்யாநகரில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இரண்டு மணி நேர மௌனப் போராட்டத்தை மேற்கொண்டார்.

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தனது போராட்டத்தைக் காலை 11 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1 மணிக்கு நிறைவு செய்ததாக சமூக ஆர்வலரின் உதவியாளர் தத்தா அவாரி பிடிஐயிடம் தெரிவித்தார்.

அஹில்யாநகரில் உள்ள மகாத்மிக காந்தி சிலைக்கு அருகே இந்தப் போராட்டத்தை நடத்திய ஹசாரே, பின்னர் அதே மாவட்டத்தில் உள்ள தனது கிராமமான ரலேகன் சித்திக்குத் திரும்பினார்.

அன்னா ஹசாரே பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில்,

வன்முறை மற்றும் காவல்துறை நடவடிக்கை செய்திகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றன. போராட்டக்காரர்களின் அதிருப்தியைச் சட்டம் ஒழுங்குப் பிரச்னையாகப் பார்க்காமல், சமூகத்தின் வேதனையாகவும், எதிர்பார்ப்புகளாகவும் பார்க்க வேண்டும்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரப்பட்டால், அது அரசைக் கவிழ்க்காது. மாறாக அதன் செயல்பாட்டை மேலும் பொறுப்புணர்வு மிக்கதாகவும், திறமையானதாகவும் மாற்றும்.

போராடுபவர்களின் கருத்துக்களைப் பொறுமையுடன் கேட்கவும், நம்பிக்கையான சூழலை உருவாக்கவும், ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகளைக் காணவும் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கடிதத்தில் எழுதியிருந்தார்.

Social activist Anna Hazare on Thursday observed a two-hour-long maun andolan (silent protest) at Ahilyanagar in Maharashtra to extend his support for protesting students in Delhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.