ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தில்லியில் மீண்டும் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்!

தில்லியில் மீண்டும் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டது பற்றி...

Delhi metro train

தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல் - PTI

Published On :23 ஜூலை 2026, 10:21 am IST

சிஜேபி போராட்டம் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், தில்லியில் உள்ள முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேட்வில் நிகழ்ந்த குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தின் ஒரு முன்னெடுப்பாக கடந்த திங்கள்கிழமை (ஜூலை 20) நாடாளுமன்றத்தை நோக்கி அமைதிப் பேரணி நடத்த முயன்ற சிஜேபி ஆதரவாளர்களை காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டு வீசியும் தாக்குதல் நடத்தினர். இதனால் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.

இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லியில் உள்ள முக்கிய இடங்களுக்கு அருகில் உள்ள லோக் கல்யாண் மார்க், ராஜீவ் சௌக், படேல் சௌக், ராமகிருஷ்ண ஆசிரம மார்க், பாரகாம்பா சாலை, உச்ச நீதிமன்றம், சேவா தீர்த்தம், ஜன்பத், மண்டி வீடு, மத்திய செயலகம், ஐடிஓ, தில்லி கேட், இந்திரபிரஸ்தம், கான் சந்தை, ஜோர் பாக், சிவாஜி அரங்கம் ஆகிய 16 மெட்ரோ நிலையங்களை மறுஉத்தரவு வரும் வரை மூடப்படுவதாக புதன்கிழமை காலை அறிவிக்கப்பட்டது.

பின்னர், மீண்டும் நேற்று மாலை முதல் அனைத்து ரயில் நிலையங்களும் வழக்கம் போல் இயங்குவதாக தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது.

இந்த நிலையில், இன்று காலை 7 மணிமுதல் மறுஉத்தரவு வரும் வரை 16 ரயில் நிலையங்களும் மீண்டும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தில்லி மெட்ரோ ரயில் பயணிகள் குழப்பமடைந்ததுடன், கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

Summary

Metro rail stations in Delhi closed again!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.