ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

4.5 டன் மருந்து பொருள்கள்: கென்யாவுக்கு அனுப்பியது இந்தியா

எபோலா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க கென்யாவுக்கு உதவும் நோக்கில் முதல்கட்டமாக 4.5 டன் மருந்து பொருள்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

எபோலா

Published On :24 ஜூலை 2026, 3:34 am IST

எபோலா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க கென்யாவுக்கு உதவும் நோக்கில் முதல்கட்டமாக 4.5 டன் மருந்து பொருள்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

இதுகுறித்து கென்யாவுக்கான இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

விமானம் மூலம் இந்தியா அனுப்பி வைத்த 4.5 டன் மருந்து பொருள்கள், கென்யா தலைநகா் நைரோபியை வந்தடைந்தன. இதையடுத்து நைரோபி விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த மருந்து பொருள்களை கென்ய சுகாதாரத் துறை செயலா் ஆடன் துவாலேயிடம் கென்யாவுக்கான இந்திய தூதா் ஆதா்ஷ் ஸ்வைகா ஒப்படைத்தாா்.

எபோலா தொடா்பான சிகிச்சைக்காக ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியா இதுவரை 45 டன்னுக்கும் அதிகமாக மருந்து பொருள்களை அனுப்பியுள்ளது. கென்யாவுக்கும் முதல் நாடாக பல்வேறு மருத்துவ உதவிகளை இந்தியா செய்துள்ளது. கரோனா காலத்தில், கென்யாவுக்கு 11 லட்சம் டோஸ் இந்திய தயாரிப்பு தடுப்பூசி மருந்துகளை இந்தியா அளித்து உதவியுள்ளது.

விரைவில் 2-ஆவது கட்டமாக இந்தியா மருந்து பொருள்களை கென்யாவுக்கு அனுப்பி வைக்கவுள்ளது என்று இந்திய தூதரக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.