ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ரயில் ஒன் செயலியில் 3% தள்ளுபடி சலுகை நீட்டிப்பு!

பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.

rail one

ரயில் ஒன் செயலி - படம் - எக்ஸ்

Published On :22 ஜூலை 2026, 3:27 pm IST

ரயில் ஒன் செயலியில் அனைத்து ரயில்களிலும் முன்பதிவில்லாத பயணச்சீட்டுகளைப் பெறும் பயணிகளுக்கு 3 சதவீதம் தள்ளுபடி சலுகை 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடையே எண்ம (டிஜிட்டல்) பயணச்சீட்டு முறையை ஊக்குவிக்கும் வகையில் ரயில் ஒன் செயலியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியது.

அதில், முன்பதிவில்லாத பயணச் சீட்டுகள், முன்பதிவுள்ள பயணச் சீட்டுகள், நடைமேடை பயணச் சீட்டுகள் என அனைத்து வகை பயணச் சீட்டுகளையும் பெறும் வசதி உள்ளது. அத்துடன் ஐஆர்சிடிசி ரயில் கனக்ட், என்டிஇஎஸ், யுடிஎஸ் ஆன் மொபைல், ரயில் மதாத், ஃபுட் ஆன் டிராக் ஆகிய சேவைகளைப் பெறும் ஒருங்கிணைந்த செயலியாகவும் உள்ளது.

தற்போது ரயில் ஒன் சேவை மூலம் அனைத்து ரயில்களிலும் முன்பதிவில்லாத பயணக் கட்டணச் சீட்டை முன்னதாக பதிவு செய்து பெறுவோருக்கு 3 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது.

அதற்காக ரயில் ஒன் செயலி தளத்தில் யுபிஐ, டெபிட் கார்டுகள், நெட்பேங்கிங் போன்ற எண்ம (டிஜிட்டல்) கட்டண முறைகளைப் பயன்படுத்தி முன்பதிவு செய்தால் தள்ளுபடி சலுகையைப் பெறலாம்.

ஆர்-வால்ட் மூலம் முன்பதிவில்லாத பயணச் சீட்டுகளைப் பதிவு செய்யும் பணிகளுக்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 3 சதவீத போனஸ் கேஷ் பேக் சலுகை 2028 ஆகஸ்டு 24 ஆம் தேதி வரையில் வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரயில் ஒன் செயலியில் பயணச்சீட்டுகளைப் பெறும் பயணிகளுக்கு 3 சதவீத கட்டண சலுகை வரும் 2027 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Summary

The 3% discount offer for passengers purchasing unreserved tickets for all trains via the Rail One app has been extended until March 2027.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.