ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது பற்றி...

lok sabha

மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா - Sansad

Published On :20 ஜூலை 2026, 11:05 am IST

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் இரு அவைகளிலும் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் தொடங்கவுள்ள நிலையில், வருகின்ற ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தொடரில், அண்மையில் மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட சில அவசர சட்டங்களுக்கு மாற்றான மசோதாக்கள் உள்பட 8 மசோதாக்கள் இந்தக் கூட்டத் தொடரில் கொண்டுவரப்படவுள்ளன.

முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தின் சீரான செயல்பாடு, அர்த்தமுள்ள விவாதங்கள், நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான கூட்டு உறுதிப்பாடு ஆகியவை தற்போதைய காலத்தின் கட்டாயம் என்றும், எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

முக்கிய மசோதாக்கள்

இந்த கூட்டத்தொடரில், முக்கியமாக வருமான வரி சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்பட உள்ளது. ரூபாயின் மீதான அழுத்தத்தைச் சமாளிப்பதற்காக வெளிநாட்டு மூலதனத்தை ஈா்க்கும் நோக்கில், அரசுப் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் மற்றும் மூலதன ஆதாயங்கள் மீதான வருமான வரியிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளா்களுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றாக இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38-ஆக உயா்த்தி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றான மசோதா, தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்டத் திருத்த மசோதா, பிறப்பு - இறப்பு பதிவுச் சட்ட திருத்த மசோதா உள்ளிட்டவையும் தாக்கலாக உள்ளன.

தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிா் இடஒதுக்கீடு அமலாக்கத்துக்கான அரசமைப்புச் சட்ட திருத்த மசோதா பட்டியலிடப்படவில்லை. எனினும், கூடுதல் மசோதாவாக அதை கொண்டுவர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மசோதா நிறைவேற மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை வாக்குகள் தேவை.

இந்தக் கூட்டத் தொடரில், அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு , நீட் வினாத்தாள் கசிவு, பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு, திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் விவகாரம் உள்ளிட்டவை முக்கியமாக எதிரொலிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Summary

The Monsoon Session of Parliament has begun

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.