ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிஜேபி நிர்வாகிகளுடன் காவல்துறை பேச்சுவார்த்தை! அடுத்து என்ன?

சிஜேபி நிர்வாகிகளுடன் காவல்துறை பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பது பற்றி...

cjp protest

சிஜேபி போராட்டம் - PTI

Published On :20 ஜூலை 2026, 11:50 am IST

தில்லி காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் சிஜேபி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.

தேசிய தோ்வு முகமை நடத்தும் நீட் தோ்வு உள்பட பல தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டம் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறவுள்ள சூழலில், ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி அமைதிப் பேரணி நடத்தப்படும் என்று சிஜேபி அறிவித்திருந்தது.

இதையடுத்து அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில், தில்லி முழுவதும் நேற்றிரவு முதல் 163 தடைச் சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது.

தடையை மீறி பேரணி செல்ல முயன்ற சிஜேபி இளைஞர்களை இன்று காலை காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் தடுத்து நிறுத்தினர்.

இதனிடையே, தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், சிஜேபி ஆதரவாளர்கள் மீது தடியடி நடத்தி காவல்துறையினர் கலைக்க முயற்சித்தனர்.

தொடர்ந்து, சிஜேபியின் தலைமை செய்தித் தொடர்பாளர் செளரவ் தாஸை, தில்லி காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது செய்தியாளர்களுடன் பேசிய அவர், காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே, தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் குவிந்துள்ள இளைஞர்கள் கட்சித் தலைமையின் அடுத்தக்கட்ட அறிவிப்புக்காக காத்துள்ளனர்.

Summary

Police hold talks with CJP office-bearers! What next?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.