ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அனைத்துக் கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

தில்லியில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

All-party meeting: Opposition parties walk out

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு. - Photo grab ANI Video.

Published On :19 ஜூலை 2026, 1:31 pm IST

தில்லியில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் நாளை(ஜூலை 20) தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அண்மையில் மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட சில அவசர சட்டங்களுக்கு மாற்றான மசோதாக்கள், இந்தக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

முக்கிய மசோதாக்கள் தாக்கலாகவுள்ள நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நீட் வினாத்தாள் கசிவு, அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு, மேற்காசிய தாக்குதல்களில் இந்திய மாலுமிகள் உயிரிழப்பு, விலைவாசி உயா்வு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிா்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இதனால், கூட்டத் தொடரில் அனல் பறக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனிடையே மழைக்கால கூட்டத் தொடா் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசின் ஏற்பாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.

இந்த நிலையில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். திரிணமூல் காங்கிரஸின் அதிருப்தி எம்பிக்களை கூட்டத்திற்கு அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, சமாஜவாதி, இடதுசாரிகள், ஆம் ஆத்மி, சிவசேனை உத்தவ் பிரிவு உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Opposition parties, including the DMK, walked out of the all-party meeting being held in Delhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.