ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திருமலை தேவஸ்தான கோசாலைக்கு வழங்கப்பட்ட ஆண் குதிரை உயிரிழப்பு

திருமலை தேவஸ்தான கோசாலைக்கு வழங்கப்பட்ட ஆண் குதிரை உயிரிழந்தது குறித்து...

 A nine-year-old male horse donated  TO TTD GoShala DIES

திருமலை தேவஸ்தான கோசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டு உயிரிழந்த ஆண்குதிரை. - TTD

Published On :19 ஜூலை 2026, 11:24 pm IST

திருப்பதி: திருமலை தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி கோசாலைக்கு சமீபத்தில் நன்கொடையாக அளிக்கப்பட்ட ஒன்பது வயது ஒரு ஆண் குதிரை மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டும் உயிரிழந்தது.

மதுரையைச் சோ்ந்த பக்தரான வடிவேலு முகுந்தன், கடந்த ஜூலை 13 ஆம் தேதி திருமலை தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி கோசாலைக்கு ஒன்பது வயது ஒரு ஆண் குதிரையை நன்கொடையாக வழங்கினாா்.

அந்த குதிரை கோசாலைக்கு வந்த நாளிலிருந்தே நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தியது; அதாவது உணவு மற்றும் தண்ணீர் உட்கொள்வதில் குறைபாடு, அடிக்கடி படுத்துக்கொள்வது, தரையில் புரளுதல் மற்றும் எழுந்து நிற்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தன. பின்னர் அந்த குதிரை தனிமைப்படுத்தப்பட்டு, கால்நடை மருத்துவர்கள் அந்த குதிரையை கண்காணித்து, நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் தேவையான சிகிச்சையையும் சிறப்புப் பராமரிப்பையும் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து குதிரையின் ரத்தம் மற்றும் சாண மாதிரிகள் திருப்பதியில் உள்ள மாநில விலங்கு நோய் கண்டறியும் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.

ஆரம்பகட்ட பரிசோதனை முடிவில், குதிரைக்கு நீண்டகாலமாக கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து "கால்நடை மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பு மற்றும் அனைத்து மருத்துவ முயற்சிகளுக்கும் பிறகும், அந்த ஒன்பது வயது குதிரை சனிக்கிழமை உயிரிழந்தது," என்று தேவஸ்தான ஸ்ரீவாரி கோசாலையின் இயக்குநா் டாக்டா் ஏ.வி.என். சிவகுமாா், கோயில் நிர்வாகத்தின் சார்பில் சனிக்கிழமை இரவு வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கால்நடை நிபுணர்கள் குழு, அந்தக் குதிரைக்கு உடல் ஆய்வுக்கூறு நடத்தி, விரிவான ஆய்வகப் பரிசோதனைக்காக அதன் மாதிரிகளை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பிய பின் உரியமுறையில் அதன் உடல் புதைக்கப்பட்டது.

மேலும், குதிரையை நன்கொடையாக அளித்த மதுரையைச் சோ்ந்த பக்தரான வடிவேலு முகுந்தன், சனிக்கிழமை ஸ்ரீவாரி கோசாலைக்கு வருகை தந்திருந்ததாகவும், குதிரை உயிரிழந்தபோது அங்கேயே இருந்ததாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

A nine-year-old male horse, recently donated to the Tirumala Tirupati Devasthanams' (TTD) Sri Venkateswara Gosamrakshana Shala, died despite medical treatment.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.