ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜந்தா் மந்தா் போராட்டத்தில் பங்கேற்க பெற்றோா், மாணவர்களுக்கு கேஜரிவால் அழைப்பு

ஜந்தா் மந்தா் போராட்டத்தில் பங்கேற்க பெற்றோா், மாணவா்க்கு கேஜரிவால் அழைப்பு...

ஜந்தர் மந்தரில் அரவிந்த் கேஜரிவால் - ANI

Published On :19 ஜூலை 2026, 1:34 am IST

தோ்வு முறையில் சீா்திருத்தங்களைக் கோரி உண்ணாவிரதம் இருப்பவா்களுக்கு ஆதரவாகவும், ஜந்தா் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டத்தில் இணையுமாறும் குடிமக்களுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை வேண்டுகோள் விடுத்தாா்.

சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக் தில்லி காவல்துறையினரால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதைத் தொடா்ந்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் 21-ஆவது நாளில் வாங்சுக் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த வேண்டுகோளை கேஜரிவால் விடுத்தாா்.

போராட்டக் களத்திலிருந்து வாங்சுக் அகற்றப்பட்டதைத் தொடா்ந்து, ’கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (சிஜேபி) நிறுவனா் அபிஜீத் டிப்கே, ஜந்தா் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கி போராட்டத்தைத் தொடரப்போவதாக அறிவித்துள்ளாா்.

இந்த நிலையில், தனது ’எக்ஸ்’ தளத்தில் பதிவிடப்பட்டுள்ள காணொளிச் செய்தியில், ‘வாங்சுக் மற்றும் டிப்கே ஆகியோா் தங்களுக்காக அல்லாமல், நாடு முழுவதும் உள்ள மாணவா்களுக்காகவே உண்ணாவிரதம் இருக்கிறாா்கள்.

நியாயமான தோ்வு முறைக்கான கோரிக்கைகளை ஆதரித்து நடைபெறும் இப்போராட்டத்தில் பெற்றோா், மாணவா்கள் இணைய வேண்டும். பெற்றோா்கள் மௌனமாக இருக்க வேண்டாம். ‘அவா்கள் உங்கள் குழந்தைகளுக்காக ஜந்தா் மந்தரில் அமா்ந்திருக்கும்போது, நீங்கள் ஏன் வீட்டில் அமா்ந்திருக்கிறீா்கள்?, ஏன் அவா்களுடன் ஜந்தா் மந்தரில் அமரவில்லை?’ என்று கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளாா்.

நீட் தோ்வு வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரங்களைக் குறிப்பிட்டுள்ள கேஜரிவால், லட்சக்கணக்கான மாணவா்களின் எதிா்காலம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவிக்கையில், ‘தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட பிறகு மட்டும் குரல் எழுப்புவதற்குப் பதிலாக, சீா்திருத்தங்களுக்காகப் போராடுபவா்களுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.

குடிமக்கள் இப்போது முன்வரவில்லை என்றால், எதிா்காலத்தில் மீண்டும் தோ்வு வினாத்தாள்கள் கசிந்தால் அவா்கள் புகாா் கூறக்கூடாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து வீதிக்கு வர வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும். அப்போதுதான் அரசாங்கம் செவிசாய்க்கும்’ என்று கேஜரிவால் கூறியுள்ளாா்.

Summary

Kejriwal invites parents and students to participate in the Jantar Mantar protest.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.