
3..2..1.. கவுன்ட்டௌன் முடிந்தது! விக்ரம்-1 ராக்கெட் ஏவுவதில் தாமதம்!
தனியாா் நிறுவனம் தயாரித்த ‘விக்ரம்-1’ ராக்கெட், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்ணில் ஏவப்படுவதில் தாமதம் குறித்து...
‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட் - X | PM Modi
தனியாா் நிறுவனம் தயாரித்த ‘விக்ரம்-1’ ராக்கெட், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்ணில் ஏவப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக தனியார் நிறுவனம் தயாரித்த ‘விக்ரம்-1’ ராக்கெட் புவியின் தாழ்வட்டப் பாதைக்கு அனுப்பப்பட்டு, விண்வெளி ஆய்வுக் கலன்களை நிலைநிறுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்துக்கு ‘ஆகமன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஹைதராபாதை தலைமையிடமாகக் கொண்ட ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், இந்த ராக்கெட்டை உள்நாட்டிலேயே வடிவமைத்துள்ளது.
இந்த நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆய்வு மையத்திலிருந்து இன்று காலை 11.30 மணிக்கு ராக்கெட்டை செலுத்தத் திட்டமிடப்பட்டு, கவுன்ட்டௌனும் முடிந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ராக்கெட்டின் என்ஜினை ரீ-ஸ்டார்ட் செய்து, மீண்டும் 12:05:30-க்கு விண்ணில் செலுத்த கவுன்ட்டௌன் தொடங்கப்பட்டுள்ளது.
Summary
Delay in launching the Vikram-1 rocket due to a technical glitch
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




