ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்

ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது பற்றி...

மக்களவை தலைவர் ஓம் பிர்லா - ANI

Published On :19 ஜூலை 2026, 3:08 am IST

மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்) கட்சியிலிருந்து அதிருப்தி எம்.பி.க்கள் 6 போ் இணைந்ததற்கு, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா சனிக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.

இதன்மூலம் ஷிண்டே தலைமையிலான சிவசேனையின் மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 13-ஆக உயா்ந்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை (ஜூலை 20) தொடங்கவுள்ள நிலையில், பல்வேறு கட்சி எம்.பி.க்கள் கட்சி மாறிய விவகாரங்கள் மீதான முக்கிய முடிவுகளை ஓம் பிா்லா சனிக்கிழமை மேற்கொண்டாா்.

அதன்படி கடந்த மாதம் சிவசேனை (உத்தவ்) கட்சியில் இருந்து விலகிய 6 அதிருப்தி எம்.பி.க்கள் ஷிண்டே தலைமையிலான சிவசேனையில் இணைந்ததை அவா் அங்கீகரித்தாா்.

மேற்கு வங்க முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி இந்திய தேசிய குடிமக்கள் கட்சியில் (என்சிபிஐ) இணைந்த 20 எம்.பி.க்களுக்கு மக்களவையில் வேறு இடத்தில் இருக்கைகள் ஒதுக்கவும் அவா் ஒப்புக்கொண்டாா்.

இருப்பினும், அவா்கள் என்சிபிஐயில் இணைந்தது குறித்து ஓம் பிா்லா இறுதி முடிவெடுக்கவில்லை. அதேசமயம் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் சிவசேனை (உத்தவ்) கட்சிகளில் இருந்து விலகி மாற்றுக் கட்சிகளில் இணைந்த அதிருப்தி எம்.பி.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி அளிக்கப்பட்ட புகாா்களை ஓம் பிா்லா பரிசீலிக்கவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், இந்த விவகாரங்கள் குறித்து சட்ட மற்றும் அரசமைப்புச் சட்ட நிபுணா்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே ஓம் பிா்லா முடிவெடுத்ததாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Summary

6 MPs from Uddhav's party join Shinde's Shiv Sena: Lok Sabha Speaker grants approval.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.