ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மகளிர் உதவித் தொகை திட்டம்! 92 லட்சம் பெண்கள் நீக்கம்! எங்கே?

மகளிர் உதவித் தொகை திட்டத்திலிருந்து 92 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டது பற்றி...

maharastra

மகளிர் உதவித் தொகை - பிரதிப் படம்

Published On :14 ஜூலை 2026, 1:03 pm IST

மகாராஷ்டிரத்தில் மகளிர் உதவித் தொகை திட்டத்திலிருந்து 92 லட்சம் பயனர்களை அந்த மாநில அரசு நீக்கியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்துக்கும் குறைவாகவுள்ள குடும்பத்தின் 21 வயது முதல் 65 வயது வரையிலான பெண்களுக்கு மாதம் ரூ. 1,500 வழங்கும் ’தாய் சகோதரி பெண்கள் நலத் திட்டம்’ (மாஜி லட்கி பகிண் யோஜனா) நடைமுறையில் உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 2.4 கோடி பெண்களுக்கு மாதம் ரூ. 1,500 அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், அவர்களின் வங்கிக் கணக்குகளை 'இ-கேஒய்சி' (e-KYC) சரிபார்ப்பு செய்ய மாநில அரசு அறிவுறுத்தியிருந்தது.

ஆனால், கடந்த 8 மாதங்களாகியும் 'இ-கேஒய்சி' சரிபார்ப்பு நடைமுறை செய்யாத சுமார் 92 லட்சம் பயனாளிகளை மாநில அரசு நீக்கியுள்ளது. இது மொத்த பயனாளிகள் எண்ணிக்கையில் 38 சதவிகிதம் ஆகும்.

'இ-கேஒய்சி' சரிபார்ப்பு மட்டுமின்றி பல்வேறு காரணங்களால் 92 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 50 முதல் 55 லட்சம் பெண்கள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் 'இ-கேஒய்சி' நடைமுறையை நிறைவு செய்யத் தவறியதால் நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 12 லட்சம் பெண்களின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 2.5 லட்சத்துக்கும் மேல் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களும் நீக்கப்பட்டுள்ளனர். 4.5 லட்சம் பெண்கள் அதிபட்ச வயதான 65-ஐ கடந்துள்ளதால் நீக்கப்பட்டுள்ளனர். சுமார் 5 லட்சம் பெண்கள் ஏற்கனவே 'நமோ ஷேத்காரி யோஜனா' திட்டத்தின் பயனர்களாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயனடைந்து வந்த 14,000 ஆண்கள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தவறுதலாக நீக்கப்பட்டவர்கள் மறுபரிசீலனைக்கு முறையிடலாம் என்றும், மறுசரிபார்ப்பு நடைமுறைக்குப் பின்னரே பயனாளிகளின் இறுதி எண்ணிக்கை வெளியாகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் 2023-24 நிதியாண்டில் பெண்கள் நலனுக்காக ரூ. 261.78 கோடி செலவிடப்பட்ட நிலையில், 2024-25 நிதியாண்டில் ரூ. 33,554.36 கோடியாக உயர்ந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Women's Financial Assistance Scheme - 9.2 million women removed! Where?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.