ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தாய்மை குணம் பெண்களின் இயல்பு: உ.பி. ஆளுநருக்கு ஆதரவாக கங்கனா பதிவு!

உ.பி. ஆளுநருக்கு ஆதரவாக கங்கனா ரணாவத் எம்பி பதிவிட்டுள்ளார்.

கங்கனா ரணாவத் எம்பி

Published On :12 ஜூலை 2026, 10:41 pm IST

பெண்கள் குறித்து உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் பேசியது சர்ச்சையானதைத் தொடர்ந்து கங்கனா ரணாவத் எம்பி அவருக்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ளார்.

கான்பூரில் உள்ள சத்ரபதி ஷாஹு ஜி மஹாராஜ் பல்கலைக்கழகத்தில் 41-வது பட்டமளிப்பு விழா ஜூலை 9 அன்று நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், “பெண்களாகிய நீங்கள் ஐஏஎஸ் அதிகாரியாக ஆனாலும் சரி, ஆசிரியராக ஆனாலும் சரி முதலில் சிறந்த தாயாக ஆகவேண்டும். அனைவருக்கும் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்” எனப் பேசியிருந்தார்.

அவர் பேசியது சர்ச்சையாகி சமூக ஊடகங்களில் விமர்சனங்களைச் சந்தித்தது.

இந்த நிலையில், அவருக்கு ஆதரவாக கங்கனா ரணாவத் எம்பி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “நாங்கள் சிறுவர்களாக இருக்கையில் என் சகோதரன் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடுவான். ஆனால், நான் பொம்மைகளுக்கு வீடு கட்டி, அவற்றிகு துணி தைத்து, உணவு சமைத்து, பொம்மை வீட்டில் அனைவரையும் மகிழ்விக்கும் அம்மாவாக நடிப்பேன்.

இது நாம் கற்றுக்கொள்ள வேண்டியதல்ல. மனிதகுலத்தைப் பேணி பாதுகாக்கும் கடமையை பெண்களாகிய நமக்கு இறைவன் வழங்கியுள்ளார். அதுவே நமது உண்மையான இயல்பு.

அதனால்தான் பெண்கள் தேவி, சக்தி, அன்னபூர்ணா, மாதா போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக அன்பு செலுத்துவதும், உணவளிப்பதும், நடனமாடுவதும், பேணி வளர்ப்பதும் பேரானந்தம் தரக்கூடியது” என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Maternal instinct is inherent to women: Kangana posts in support of UP Governor!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.