இந்தோனேசியா, ஆஸ்திரேலியா பயணங்கள் நிறைவு! நியூசிலாந்து புறப்பட்டார் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி நியூசிலாந்து புறப்பட்டுள்ளது குறித்து...

பிரதமர் மோடி நியூசிலாந்து நாட்டுக்குப் புறப்பட்டார்...
பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியாவில் இருந்து நியூசிலாந்து நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூலை 6 அன்று அரசு முறைப் பயணமாக இந்தோனேசியா நாட்டுக்குச் சென்றார். 3 நாள்கள் பயணத்தில் அங்கு முக்கிய பேச்சுவார்த்தைகளை நிறைவுச் செய்து கடந்த ஜூலை 8 அன்று ஆஸ்திரேலியாவுக்குச் சென்றடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா அரசு மற்றும் அங்கு வாழும் இந்திய வம்சாவளியினர் சார்பில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் பிரதமர் மோடி இடையிலான சந்திப்பில் இருநாடுகள் இடையிலான முக்கிய கூட்டுறவு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்தப் பயணத்தில், புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திற்கு இருநாடுகளின் பிரதமர்களும் வருகை தந்தபோது, இந்தியா-ஆஸ்திரேலியா விளையாட்டு ஒத்துழைப்புக்கான செயல்திட்டம் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், தனது 3 நாள் ஆஸ்திரேலிய பயணத்தையும் நிறைவுச் செய்த பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை (ஜூலை 10) காலை நியூசிலாந்து நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவரை ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வாங் விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்தார்.
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனின் அழைப்பை ஏற்று 2 நாள் அரசு முறைப் பயணமாக அந்நாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அங்கு ஏராளமான தலைவர்கள் மற்றும் தொழில்முனைவோரைச் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
PM Modi has departed from Australia for New Zealand.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







