ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

வயநாடு நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது தொடர்பாக...

Wayanad landslide death toll rises

வயநாடு நிலச்சரிவு - (கோப்புப்படம்)

Published On :9 ஜூலை 2026, 3:01 pm IST

கேரள மாநிலம், வயநாடு நிலச்சரிவிலிருந்து மேலும் மூவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதை அடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 6 - ஆக உயர்ந்துள்ளது.

வயநாடு மாவட்டம், மெப்பட்டியில் தனியாா் நிறுவனத்தின் சுரங்கம் தோண்டும் பணி நடைபெறும் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் தொழிலாளா்கள் மூவர் உயிரிழந்தனா். மேலும் 10 போ் காயமடைந்தனா்.

நிலச்சரிவில் சிக்கி 5 போ் காணாமல் போனது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா்களைத் தேடும் பணி மூன்றாவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகின்றது. சம்பவ இடத்தில் தீயணைப்புப் படையினா், தேசிய பேரிடா் மீட்புப் படையினா் மோப்ப நாய்களின் துணையுடன் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா். நிலச்சரிவு ஏற்பட்ட மலைப் பகுதிக்கு கீழே உள்ள ஆற்றுப் பகுதியிலும் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை இடிபாடுகளிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட மூவரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அஜாருதின் அன்சாரி, ஹிமாசலைச் சேர்ந்த ராகுல் சர்மா பொறியாளராக பணியாற்றி வந்தவர், மொஹமத் இம்ரான் பிகாரைச் சேர்ந்தவர்.

கேரள அமைச்சர்கள் ஏ.பி. அனில் குமார், டி. சித்திக் கூறுகையில்,

மீட்கப்பட்டவர்களில் ஒருவர் இன்று காலை தேடுதல் பணி நடைபெற்று வரும் பகுதியின் 'மண்டலம் 1-லிருந்தும், மற்ற இருவர் ஆற்றிலிருந்தும் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த பகுதியின் மண்டலம் 1 மற்றும் 2-ல் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆற்றின் அருகிலும் தேடுதல் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட உடல்கள் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், இருவரின் உடல்கள் தேடப்பட்டு வருகின்றது. இந்த சம்பவத்தில் காயமடைந்த 10 பேரில், மூவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். நால்வர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், ஆனால் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது; மற்ற மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர், அவர்களில் இரண்டு பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

The death toll following the Wayanad landslide rose to six on Thursday with recovery of three more bodies from the disaster site, district officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.