இந்தோனேசியாவில் பெங்களூர் ஐஐஎம் வளாகம் அமைக்கப்பட உள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமா் நரேந்திர மோடி இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய 3 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். மூன்று நாடுகள் பயணத்தின் முதல் கட்டமாக, இந்தோனேசியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
இன்று காலை இந்தோனேசியாவின் அதிபர் மாளிகைக்குச் சென்ற மோடிக்கு, குதிரைப்படை வீரர்களின் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தோனேசியாவின் உயரிய விருதான 'பிந்தாங் அதிபூர்ணா' என்ற விருதைப் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ வழங்கி கௌரவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் ஒற்றுமை, நிலைத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றிற்குச் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இது பிரதமர் நரேந்திர மோடிக்குப் பிற நாடுகளால் வழங்கப்படும் 35-வது சர்வதேச விருதாகும்.
இதையடுத்து, சுகாதாரம், கல்வி மற்றும் பிற துறைகளில் இந்தியா - இந்தோனேசியா இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில், தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் 'இந்திய மேலாண்மை நிறுவனம்' பெங்களூருவின் வெளிநாட்டு வளாகத்தை அமைப்பதற்கான ஒப்பந்தமும் அடங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
ஐஐஎம் பெங்களூருவின் வெளிநாட்டு வளாகத்தை நாங்கள் இந்தோனேசியாவில் அமைக்கவுள்ளோம். இது ஆசியான் பிராந்தியத்தில் உள்ள இளைஞர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் என்று இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்திக்கும்போது மோடி கூறினார்.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிங்கசாரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஐஐஎம் பெங்களூர் வளாகம் அமைக்கப்படவுள்ளது.
ஏற்கெனவே அகாமதாபாத் ஐஐஎம், துபையில் வளாகம் ஒன்றை அமைத்துள்ளது. இதன் பிறகு வெளிநாட்டில் வளாகம் ஒன்றை ஏற்படுத்தும் இரண்டாவது ஐஐஎம் என்ற பெருமை பெங்களூர் ஐஐஎம்-க்கு கிடைத்துள்ளது.
Prime Minister Narendra Modi has announced that an IIM Bangalore campus is set to be established in Indonesia.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தோனேசியாவில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது!

இந்தோனேசியாவில் பிரதமர் மோடிக்கு உற்சாகமான வரவேற்பு!

3 நாடுகளுக்கு பயணம்! பிரதமர் மோடி புறப்பட்டார்!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan





