சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

மும்பையில் கனமழை: முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு வாகனம் முன் விழுந்த மரம்!

மும்பையில் கனமழை காரணமாக முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு வாகன முன் மரம் விழுந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

News image

Photo grab X video.

Updated On :5 ஜூலை 2026, 3:30 pm IST

மும்பையில் கனமழை காரணமாக முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு வாகன முன் மரம் விழுந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். தலைநகர் மும்பையிலும் கனமழை நீடிப்பதால் பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது.

இந்த நிலையில் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை கனமழை காரணமாக மேற்கு புறநகர் பகுதியில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு வாகனம் முன் மரம் விழுந்தது. இதனால் போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை ஏற்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், அம்பானியின் பாதுகாப்பு வாகனம் முன்னால் மரம் விழுந்ததால் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் அதிகாரிகள் அந்த தடையை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

பாந்த்ரா பகுதியில் நடந்த இந்த சம்பவத்தின் விடியோக்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. மும்பையில் மழை தொடர்பான பாதிப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. நகரின் பல்வேறு பகுதிகளில் பெரிய கிளைகள் மற்றும் மரங்கள் சாலைகள் மற்றும் வாகனங்கள் மீது விழும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

வெள்ளப்பெருக்கு மற்றும் மரம் விழும் அபாயம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் பயணிக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Summary

As torrential rains battered Mumbai on Sunday, a tree collapsed in front of industrialist Mukesh Ambani's security convoy in a western suburb, briefly obstructing traffic, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.