எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

ராகுல் காந்தி மீது கூட்டணிக் கட்சிகளுக்கே நம்பிக்கை இல்லை: பாஜக

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது கூட்டணிக் கட்சிகளுக்கே நம்பிக்கை இல்லை என்று பாஜக தெரிவித்தது பற்றி...

News image

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Updated On :5 ஜூலை 2026, 12:57 pm IST

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது அவருடைய கூட்டணிக் கட்சிகளுக்கே நம்பிக்கை இல்லை என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஸாத் பூனாவாலா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக அம்ரிந்தர் சிங் ராஜா மீண்டும் நியமிக்கப்பட்டதற்கு, முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி ஆதரவாளர்கள் மற்றும் பல எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸில் உள்கட்சி பூசல் நிலவி வருகிறது.

இதுகுறித்து ஷெஸாத் பூனாவாலா பேசியதாவது:

காங்கிரஸின் குணம் என்னவென்றால், அது துண்டு துண்டாகப் பிளவுபடும் தன்மை கொண்டது. இதற்குக் காரணம், அதனிடம் தலைமை, கொள்கை, குறிக்கோள் மற்றும் தொலைநோக்குப் பார்வை போன்ற எதுவும் இல்லை; மாறாக பதவிக்கான பேராசை மட்டுமே உள்ளது.

அதனால்தான் பஞ்சாப் காங்கிரஸிலிருந்து புதிய உள்கட்சிப் பூசல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் பற்றிய செய்திகள் வெளிவருகின்றன. ஒற்றுமையாக இருப்பதில் அந்தக் கட்சி தோல்வி அடைகிறது.

இதற்குக் காரணம், காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ராகுல் காந்தி மீது நம்பிக்கை இல்லை. அவர்களது கூட்டணிக் கட்சிகளுக்கும் ராகுல்காந்தி மீது நம்பிக்கை இல்லை என்று ஷெஸாத் பூனாவாலா தெரிவித்தார்.

Summary

BJP National Spokesperson Shehzad Poonawalla stated on Sunday (July 5) that even his alliance partners do not have faith in Congress leader Rahul Gandhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.