ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கர்நாடக அமைச்சரவை எப்போது விரிவாக்கம்? உறுப்பினர்கள் இடையே மீண்டும் போட்டி!

கர்நாடக அமைச்சரவையில் இடம்பெற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே மீண்டும் போட்டி...

DK Shivakumar

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் - (கோப்புப்படம்)

Published On :4 ஜூலை 2026, 10:59 am IST

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தலைமையிலான அமைச்சரவை இம்மாதம் விரிவாக்கம் செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகத்தில், கடந்த 2023 ஆம் ஆண்டு அமைந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் 2 ஆவது முதல்வராக டி.கே. சிவகுமார் கடந்த ஜூன் மாதம் பதவியேற்றுக் கொண்டார். இருப்பினும், ஆட்சி அமைத்து ஒரு மாத காலத்தை நிறைவு செய்த முதல்வர் டி.கே. சிவகுமாரின் அமைச்சரவை இதுவரை நிரப்பப்படவில்லை.

இந்த நிலையில், மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், கர்நாடக சட்டப்பேரவையின் 15 நாள் மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் ஜூலை 10 முதல் ஜூலை 14 ஆம் தேதிக்குள் எப்போது புதிய வேண்டுமானாலும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாடு பயணம் சென்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வரும் ஜூலை 8 ஆம் தேதி இந்தியாவுக்குத் திரும்புவதாகவும், அவர் வந்தவுடன் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசனை மேற்கொள்ள முதல்வர் சிவகுமார் தில்லி செல்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், கர்நாடகத்தின் புதிய அமைச்சரவையில் இடம்பெற முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளர்களான அசோக் பட்டான், ஏஎஸ் பொன்னண்ணா, கே என் ராஜண்ணா மற்றும் சட்டமேலவை உறுப்பினர் சீதாராம் உள்ளிட்டோரும் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும், அமைச்சரவையில் இடம்பெற விரும்பும் உறுப்பினர்கள் இன்று (ஜூலை 4) தில்லி செல்லும் கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பிகே ஹரிபிரசாத்தின் மூலமாகவும் ஆதரவு திரட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதில், பதவியில் இடம்பெற விரும்பும் நபர்களின் செல்வாக்கு முயற்சிகளை (லாபிகளை) ஊக்குவிக்க வேண்டாமென காங்கிரஸ் கட்சியின் தலைமை முதல்வர் சிவகுமாருக்கு அறிவுறுத்தியுள்ளது.

இருப்பினும், லக்‌ஷ்மி ஹெப்பால்கர், சிஎஸ் அப்பாஜி நாடகவுடா, ஸ்ரீனிவாஸ் மானே, கவியப்பா ஹம்பனகவுடா பத்ராளி உள்ளிட்ட கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் தில்லியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபாலை நேரில் சந்தித்ததாகச் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Summary

Reports indicate that the cabinet led by Karnataka CM D.K. Shivakumar is set to be expanded this month.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.