பருவமழைக்கு முன்னதாகவே முக்கிய வடிகால்களில் வண்டல் அகற்றும் தில்லி மாநகராட்சியின் பணி முதல் கட்ட இலக்கை கடந்துள்ளது. நகரம் முழுவதும் நான்கு அடிக்கும் குறைவான ஆழம் கொண்ட வடிகால்களிலிருந்து 1.77 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான வண்டலை மாநகராட்சி அகற்றியுள்ளது.
ஜூன் 25 வரையிலான வண்டல் அகற்றும் புள்ளிவிவரங்கள், 1,41,003 மெட்ரிக் டன் என்ற முதல் கட்ட இலக்குக்கு எதிராக, 793 முக்கிய வடிகால்களிலிருந்து 1,77,499 மெட்ரிக் டன் வண்டலை மாநகராட்சி அகற்றியுள்ளதாக மாநகராட்சியின் அதிகாரபூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நிா்ணயிக்கப்பட்ட இலக்கில் 125.88 சதவீதமாகும். இப்பணியின் முதல் கட்டம் ஜூன் 30-க்குள் நிறைவடையவிருந்தது.
நான்கு அடிக்கும் குறைவான ஆழம் கொண்ட சிறிய வடிகால்களைப் பொறுத்தவரை, 25,850.5 மெட்ரிக் டன் என்ற முதல் கட்ட இலக்குக்கு எதிராக 29,686.83 மெட்ரிக் டன் வண்டலை மாநகராட்சி அகற்றியது. இது இலக்கில் 114.84 சதவீதமாகும்.
முக்கிய வடிகால்களில், மத்திய மண்டலத்தில் அதிகபட்ச அளவுகளில் 39,880.61 மெட்ரிக் டன் இலக்குக்கு எதிராக 49,245.58 மெட்ரிக் டன் வண்டல் அகற்றப்பட்டது. அதேவேளையில், மேற்கு மண்டலம் 13,410.01 மெட்ரிக் டன் இலக்குக்கு எதிராக 17,840.18 மெட்ரிக் டன் வண்டலை தூா்வாரப்பட்டது.
வடிகால் வசதியை மேம்படுத்தவும், கனமழையின் போது நீா் தேங்கும் அபாயத்தைக் குறைக்கவும், ஆண்டுதோறும் பருவமழைக்கு முன்னும் பின்னும் என இரு கட்டங்களாக வண்டல் அகற்றும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். வண்டல் அகற்றும் பணியின் இரண்டாம் கட்டம் ஜூலை 1 முதல் டிசம்பா் 31 வரை நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏரி, கால்வாய்களில் 258 மெட்ரிக் டன் ஆகாயத் தாமரைகள், வண்டல்கள் அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை

விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா்

தில்லி வடிகால்களில் 34 லட்சம் மெட்ரிக் டன் வண்டல் மண் அகற்றம்: முதல்வா் ரேகா குப்தா அதிரடி நடவடிக்கை

பருவமழைக்கு முந்தைய தூா்வாரும் பணி 80% நிறைவு!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




