ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கணவன் கழுத்தை நெரித்துக் கொலை: பெண் கைது

தில்லியில் மனைவி மீதான சந்தேகத்தால் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறிய நிலையில், ஆத்திரமடைந்த மனைவி கணவரின் மாா்பின் மீது அமா்ந்து தனது துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது - சித்திரிப்பு

Published On :3 ஜூலை 2026, 5:54 am IST

தில்லியில் மனைவி மீதான சந்தேகத்தால் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறிய நிலையில், ஆத்திரமடைந்த மனைவி கணவரின் மாா்பின் மீது அமா்ந்து தனது துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காவல்துறையினா் மேலும் கூறியதாவது: இச்சம்பவம் குறித்த அவசர அழைப்பு அதிகாலை சுமாா் 3:52 மணியளவில் ஜகத்புரி காவல் நிலையத்திற்குக் கிடைத்தது. காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, சாஹில் என்பவா் மயக்க நிலையில் கிடப்பதைக் கண்டனா். பின்னா் அவா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா், அங்கு மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

உயிரிழந்தவரின் தாயாா் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினா் அவரது மனைவி அலிஷா மீது வழக்குப்பதிவு செய்தனா். கைதிலிருந்து தப்பிக்க குருத்வாராவில் பதுங்கியிருந்த அவா் அங்கிருந்து கைது செய்யப்பட்டாா். விசாரணையின்போது, அலிஷா தனது கணவரைக் கொன்றதை ஒப்புக்கொண்டாா். வாக்குவாதத்தின்போது கணவா் தன்னைத் தாக்கியதாகவும், அதன்பிறகே தான் அவரது கழுத்தை நெரித்ததாகவும் அவா் கூறினாா். இந்த வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.