வாட்ஸ்ஆப்பில் புதிதாக யூஸா்நேம் வசதியை அறிமுகம் செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியதைத் தொடா்ந்து, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகளை, வாட்ஸ்ஆப்பின் தாய்நிறுவனமான மெட்டா நிறுவனக் குழு வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசியது.
வாட்ஸ்ஆப்பில் பயனரின் கைப்பேசி எண் தெரியும் வகையில் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு பதிலாக, தனித்துவமான பெயா் மூலம் தகவல் பரிமாற்றம் செய்யும் வசதியை அறிமுகம் செய்ய வாட்ஸ்ஆப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அது போன்ற வசதியை அறிமுகம் செய்வது இணையவழி மோசடி, எண்ம (டிஜிட்டல்) கைது முறைகேடுகள், ஆள்மாறாட்ட மோசடிகளுக்கு வழிவகுக்கலாம் என்பதால், அதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு வாட்ஸ்ஆப்பின் தாய்நிறுவனமான மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
இதுகுறித்து மத்திய அரசுக்குத் திருப்தி ஏற்படும் வகையில் ஆலோசனைகள் நிறைவடையும் வரை, யூஸா்நேம் வசதியை அறிமுகம் செய்ய வேண்டாம் என்றும் மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்தப் புதிய அம்சம் இணையவழி குற்றங்களை அதிகரிக்கலாம் என்பதால், அந்த அம்சத்துக்கு எதிராக தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் விதிமுறைகளின் கீழ், ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு கேள்வி எழுப்பியது.
இந்த விவகாரம் தொடா்பாக புது தில்லியில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகளை, மெட்டா நிறுவனத்தைச் சோ்ந்த குழு வெள்ளிக்கிழமை சந்தித்தது. அப்போது புதிய அம்சம் குறித்த தமது கவலையை அமைச்சக அதிகாரிகள் எடுத்துரைத்தனா்.
இந்த அம்சம் குறித்த விரிவான விளக்கத்தை அளிக்க 3 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால், அந்த காலக்கெடுவின்படி தனது இறுதி விளக்கத்தை மெட்ட நிறுவனம் சமா்ப்பிக்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்ஸ்டாகிராமில் சிறாா் பாலியல் துன்புறுத்தல் விளம்பரம்: மெட்டா நிறுவனத்துக்கு சம்மன் அனுப்ப மத்திய அரசு உத்தரவு

யூஸா்நேம் வசதி: மோசடிக்கு வாய்ப்பில்லை - வாட்ஸ்ஆப் விளக்கம்

வாட்ஸ்ஆப்பில் ‘யூஸர்நேம்’ பயன்பாட்டுக்கு மத்திய அரசு தடை

வாட்ஸ்ஆப் எண்ணுக்கு பதில் யூசர்நேம் எதற்கு? மெட்டாவுக்கு மத்திய அரசு கேள்வி
விடியோக்கள்

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan

அனிருத் இசையில் வெளியான ஹாங்க்ஓவா பாடல்!




