ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி, அடுத்த வாரம் நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்வது குறித்து...

PM Modi

பிரதமர் மோடி - கோப்புப் படம்

Published On :3 ஜூலை 2026, 9:37 am IST

பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த வாரம் நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியின் நியூஸிலாந்து பயணம் குறித்து அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் கூறியிருப்பதாவது, "இந்திய பிரதமர் மோடி, அடுத்த வாரத்தில் நியூஸிலாந்துக்கு முதல் அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

உலகின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று. மேலும், நியூஸிலாந்தின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவும் முக்கியத்துவம் பெறுகிறது.

நியூஸிலாந்து - இந்தியா இடையே ஏப்ரல் மாதத்தில் கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளின் உறவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லவுள்ளோம்.

இந்த ஒப்பந்தத்தால் நியூஸிலாந்துக்கு அதிக வேலைவாய்ப்புகள், ஏற்றுமதி, வலுவான பொருளாதார வளர்ச்சியும் கிடைக்கும்.

140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்திய சந்தையில் ஏற்றுமதியை அதிகரிக்கப் புதிய வாய்ப்புகளை இந்த ஒப்பந்தம் உருவாக்கும். இதனால், நியூஸிலாந்தில் அதிக வேலைவாய்ப்புகள் கிடைப்பதோடு, ஊதியங்களும் உயரும்" என்று தெரிவித்துள்ளார்.

Summary

PM Modi to make first official visit to New Zealand next week

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.