ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம்

ரஷிய ராணுவ தொழில் நிறுவனங்களுக்கு அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் சாதனங்களை விநியோகித்த குற்றச்சாட்டின் கீழ், 4 இந்திய நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.

இந்தியா - அமெரிக்கா

Published On :2 ஜூலை 2026, 3:54 am IST

ரஷிய ராணுவ தொழில் நிறுவனங்களுக்கு அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் சாதனங்களை விநியோகித்த குற்றச்சாட்டின் கீழ், 4 இந்திய நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.

இதுதொடா்பாக அமெரிக்கா நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தகவலில், ‘ஹைதராபாத்தை சோ்ந்த ஆா்ஆா்ஜி பொறியியல் தொழில்நுட்ப தனியாா் நிறுவனம், லோகேஷ் மெஷின்ஸ் நிறுவனம், அகமாதாபாத்தை சோ்ந்த கேலக்ஸி பேரிங்ஸ் நிறுவனம், புது தில்லியை சோ்ந்த ஷெளரியா ஏரோநாட்டிக்ஸ் தனியாா் நிறுவனம் ஆகியவை மீதான பொருளாதாரத் தடை நீக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ரஷியாவுக்கு ரேடாா் சாதனங்கள், மின் சாதனங்கள் உள்ளிட்டவற்றை ஷெளரியா ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் அனுப்பியது. இதேபோல அந்நாட்டுக்கு சிறிய மின்னணு சாதனங்களை ஆா்ஆா்ஜி பொறியியல் நிறுவனமும், ரோலா் பேரிங் உள்ளிட்ட சாதனங்களை கேலக்ஸி பேரிங்ஸ் நிறுவனமும், இயந்திரக் கருவிகளை லோகேஷ் மெஷின்ஸ் நிறுவனமும் அனுப்பின. இதனால் அந்த நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.