ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இந்த ஆண்டும்... 2.5% ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாஃப்ட்!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பணிநீக்க நடவடிக்கை பற்றி...

Microsoft plans thousands of job cuts, impacting less than 2.5 percent of workforce

கோப்புப் படம் - ENS

Published On :1 ஜூலை 2026, 12:46 pm IST

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 2.5% பேரை பணிநீக்கம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

செய்யறிவு தொழில்நுட்பம், நிர்வாக செலவைக் குறைத்தல் ஆகிய நடவடிக்கைகளுக்காக பல்வேறு நிறுவனங்கள் குறிப்பாக ஐடி நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிரபல ஐடி நிறுவனமான மைக்ரோசாஃப்ட், கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டும் 2.5% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

விற்பனை மற்றும் கன்சல்டிங், கேமிங் ஆகிய துறைகளில் இந்த பணிநீக்கம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது அந்த நிறுவனத்தில் 2.20 லட்சம் பேர் பணியாற்றி வரும் நிலையில் அதில் 2.5% என்றால் தோராயமாக 5,500 பேர் வேலையிழப்பார்கள். வரும் வாரங்களில் இதுகுறித்த அறிவிப்பு பணியாளர்களுக்கு தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மே மாதத்தில் 6,000, ஜூலை மாதத்தில் 9,000 பணியாளர்களை நீக்கியது. அதை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பணிநீக்கம் குறைவாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதேநேரத்தில் பணிநீக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் பணியாளர்களுக்கு வேறு துறையில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தில் பணிபுரியும் 67 - 70 வயதுடையவர்கள் விருப்ப ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்றும் இந்தாண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Microsoft plans thousands of job cuts, impacting less than 2.5 percent of workforce

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.