தில்லி மதுபானக் கொள்கை ஊழல் குறித்த சிபிஐ வழக்கிலிருந்து அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா உள்பட 23 பேரை விடுவித்து தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அரசுத் தரப்பில் எந்தஆதாரமும் இல்லாமல் அவர்களை சிறையில் வைத்ததாக சிபிஐக்கு தில்லி ரோஸ் அவென்யூ நீதிமனறம் கண்டனம் தெரிவித்துள்ளது.
வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா, சந்திரசேகர ராவின் மகள் கவிதா உள்ளிட்ட 23 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மதுபான கொள்கையில் எந்தவிதமான சதித்திட்டமோ அல்லது குற்றவியல் நோக்கமோ இல்லை என நீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது.
வெறும் யூகத்தின் அடிப்படையில் ஒரு கதையை உருவாக்க சிபிஐ முயற்சித்துள்ளது. சிபிஐ அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணைக்கு பரிந்துரைப்பதாக தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
மதுபானக் கொள்கையின் பின்னணி
தில்லியில் கடந்த 2021-22-ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட கலால் கொள்கையில் முறைகேடு அரங்கேறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தில்லியில் சா்ச்சைக்குரிய கலால் கொள்கை வகுக்கப்பட்டபோது அந்தத் துறையின் அமைச்சராக இருந்த மனீஷ் சிசோடியா மீது இந்த விவகாரத்தில் சிபிஐயும், அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தன. பின்னா், அவா் கைது செய்யப்பட்டதால் அமைச்சா் பதவியையும், துணை முதல்வா் பதவியையும் ராஜிநாமா செய்ய நோ்ந்தது.
மது விற்பனையுடன் சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட குழுவிடம் இருந்து ஆம் ஆத்மி தலைவா்கள் சாா்பில், அக்கட்சியைச் சோ்ந்த விஜய் நாயா் என்பவா் சுமாா் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ாகவும், அந்தக் குழுவில் தெலங்கானா முதல்வா் கே. சந்திரசேகா் ராவின் மகள் கவிதா, மகுண்ட ஸ்ரீநிவாசுலு ரெட்டி உள்ளிட்டோா் இடம்பெற்றதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்தது.
கொள்கை விதிகள் மாற்றப்பட்டு ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா, கவிதா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர்.
கதறி அழுத அரவிந்த் கேஜரிவால்
சிபிஐ வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டப் பின் முன்னாள் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கதறி அழுதார்.
நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேஜரிவால்,
கலால் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி மற்றும் நாங்கள் நேர்மையானவரகள் என தில்லி நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியை முடக்க பிரதமர் மோடி அமித் ஷா சதித்திட்டம் திட்டினர். ஆனால் உண்ணை வெளியே வந்துள்ளது. கலால் வழக்கில் நாங்கள் குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
தில்லி நீதிமன்றத் தீர்ப்பு நான் நிரபராதி என்பதற்கு ஆதாரம். உண்மை வெல்லும். அரசியலமைப்பைக் கேலிப் பொருளாக்க வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார்.
ஊழல், வேலையின்மை, சுற்றுச்சூழல் சீர்கேடு போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்க்க பாஜக முயல்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.
அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் தேவை என்றும், ஆதாரமின்றி இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது என்றும் தில்லி நீதிமன்றம் குறிப்பிட்டது.
Summary
Former Delhi Chief Minister Arvind Kejriwal cried after being acquitted in a CBI case.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபான கொள்கை வழக்கில் நீதிபதியை மாற்றக் கோர கேஜரிவாலுக்கு உரிமை இல்லை: சிபிஐ

மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையின் மனுவுக்கு பதிலளிக்க கேஜரிவாலுக்கு இறுதி அவகாசம்

தூக்கு தண்டனை அறை விவகாரம்: கேஜரிவாலுக்கு தில்லி சட்டப்பேரவை எச்சரிக்கை

கலால் கொள்கை வழக்கிலிருந்து விடுதலை! சிபிஐ மனு மீது கேஜரிவால் பதிலளிக்க உத்தரவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



