ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இந்திய - அமெரிக்க இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் ஏப்ரலில் நடைமுறை : மத்திய அரசு

‘இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் வரும் மாா்ச் மாதம் கையொப்பமாகி, ஏப்ரல் மாதம் முதல் செயல்பாட்டு வர வாய்ப்புள்ளது

News image
பியூஷ் கோயல்- கோப்புப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 9:50 pm

தினமணி செய்திச் சேவை

‘இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் வரும் மாா்ச் மாதம் கையொப்பமாகி, ஏப்ரல் மாதம் முதல் செயல்பாட்டு வர வாய்ப்புள்ளது’ என்று மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், ‘பிரிட்டன், ஓமன் நாடுகளுடனான இந்தியாவின் தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள் (எஃப்டிஏ) வரும் ஏப்ரலில் நடைமுறைப்படுத்தப்படும். நியூஸிலாந்து நாட்டுடனான வா்த்தக ஒப்பந்தம் வரும் செப்டம்பரில் நடைமுறைப்படுத்தப்படும்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பின்போது இத் தகவலை அவா் தெரிவித்தாா்.

இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில், இடைக்கால இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கான செயல்திட்டத்தை இரு நாடுகளும் கடந்த வாரம் இறுதி செய்தன. இதுகுறித்த அறிவிப்பை இரு நாடுகளும் கடந்த 7-ஆம் தேதி கூட்டாக வெளியிட்டன.

அதன்படி, இருதரப்பு வா்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் ஏராளமான பொருள்கள் மீதான இறக்குமதி வரியை இரு நாடுகளும் குறைக்க உள்ளன. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது விதித்த 50 சதவீத கூடுதல் வரியை 18 சதவீதமாக அமெரிக்கா குறைக்க உள்ள நிலையில், அமெரிக்காவின் அனைத்து தொழில் நிறுவன பொருள்களுக்கும், உலா்த்தப்பட்டு காய்ச்சி வடிகட்டிய தானியங்கள், கால்நடைத் தீவனத்துக்கான சிவப்பு சோளம், மரக் கொட்டைகள், புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்கள், சோயாபீன் எண்ணெய், ஒயின் உள்ளிட்ட மதுபானங்கள் உள்பட பரவலான அமெரிக்க உணவு மற்றும் வேளாண் பொருள்களுக்கும் இறக்குமதி வரியை இந்தியா வெகுவாகக் குறைக்க உள்ளது.

இந்த இடைக்கால இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கான விதிமுறைகள் மற்றும் சட்டரீதியிலான இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான மூன்று நாள் கூட்டத்தில் பங்கேற்க இந்தியக் குழு வரும் 23-ஆம் தேதி அமெரிக்கா செல்கிறது.

பெட்டிச் செய்தி...

இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா்: அமெரிக்க தூதா்

புது தில்லி, பிப்.20: ‘அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ அடுத்த சில மாதங்களில் இந்தியா வர உள்ளாா்’ என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

புது தில்லி செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்ற அவா், பின்னா் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது இத் தகவலைத் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் விரைவில் கையொப்பமாக உள்ளது. அதன் மூலம், இருதரப்பு உறவை இரு நாடுகளும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உள்ளன. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘நாற்கர நாடுகள் கூட்டமைப்பு (க்வாட்)’ நாடுகளிடையேயான ஒத்துழைப்புக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமைப்பாக செயல்பட்டு வருகிறது’ என்றாா்.