டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

காமாக்யா கோயிலில் பிரியங்கா வழிபாடு: அசாம் தேர்தல் திட்டங்கள் தீவிரம்!

அசாம் தேர்தலுக்கான பிரியங்காவின் தீவிர முயற்சி பற்றி..

News image
காமாக்யா கோயிலில் பிரியங்கா
Updated On :19 பிப்ரவரி 2026, 7:38 am

இணையதளச் செய்திப் பிரிவு

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா குவாஹாட்டியில் உள்ள காமாக்யா தேவி கோயிலில் வழிபாடு மேற்கொண்டார்.

இரண்டு நாள் பயணமாக குவாஹாட்டிக்கு வருகை தந்துள்ளார் பிரியங்கா காந்தி. அசாம் தேர்தலுக்கான கட்சியின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக கூட்டங்களை நடத்தவுள்ளார்.

மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் 126 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கட்சியின் திரையிடல் குழுவின் தலைவராகப் பிரியங்கா உள்ளார்.

குவாஹாட்டி விமான நிலையத்தில் வருகை தந்த பிரியங்காவை மாநில காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோய் மற்றும் கட்சியின் பிற மூத்த தலைவர்கள் அவரை வரவேற்றனர்.

விமான நிலையத்திலிருந்து, அவர் நிலாச்சல் மலைகளின் மேல் உள்ள புகழ்பெற்ற காமாக்யா தேவி கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டார்.

வயநாடு எம்.பி., கட்சியின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினர்களைச் சந்தித்து, எம்.எல்.ஏ.க்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் எம்.பி.க்களுடன் நேரில் சந்திப்புகளை நடத்துவார் என்று மாநில காங்கிரஸ் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

summary

Congress leader Priyanka Gandhi Vadra arrived in Guwahati on Thursday on a two-day visit, during which she will hold a series of meetings for finalising the party's list of candidates for the Assam elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.