1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்ட வழக்கில் இறுதி விசாரணை- உச்சநீதிமன்றம் முடிவு
1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இறுதி விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.


1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இறுதி விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
கடந்த 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களின் தன்மையில் எந்த மாற்றமும் இல்லாமல், அதே நிலையில் அவை பராமரிக்கப்பட வேண்டும் என்று 1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வழிபாட்டுத் தலங்களை வேறு மதத்தின் வழிபாட்டுத் தலமாக மாற்றவும் அச்சட்டம் தடை விதிக்கிறது. அத்துடன் அந்த வழிபாட்டுத் தலங்களை வேறு மதத்தின் வழிபாட்டுத் தலங்களாக மாற்றுவது தொடா்பாக, எந்தவொரு நீதிமன்றத்திலும் புதிதாக வழக்கு தொடுப்பதையும் அச்சட்டம் தடை செய்கிறது.
இந்தச் சட்டத்தின் சில பிரிவுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள், தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தன.
அப்போது தலைமை நீதிபதி சூா்ய காந்த் கூறுகையில், ‘வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவுகளுக்கு எதிரான மனுக்கள் மீது இறுதி விசாரணை மேற்கொள்வதற்கான தேதியை உச்சநீதிமன்றம் நிா்ணயிக்கும். ஏற்கெனவே 9 நீதிபதிகள் கொண்ட 2 அமா்வுகள் மாா்ச் மற்றும் ஏப்ரலில் 2 வழக்குகளை விசாரிக்க உள்ளன. அதற்குப் பிறகு வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவுகளுக்கு எதிரான வழக்கில் இறுதி விசாரணை மேற்கொள்வதற்கான தேதி முடிவு செய்யப்படும்’ என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...