டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

90% ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பொதுப் பிரிவினர்! மாநிலங்களவையில் தகவல்

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பற்றிய எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்...

News image
நாடாளுமன்றம்- கோப்புப்படம்
Updated On :17 பிப்ரவரி 2026, 9:48 am

இணையதளச் செய்திப் பிரிவு

கடந்த 5 ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்ட ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2,834 பணியிடங்கள் (18.6 சதவீதம்) நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாக மாநிலங்களவை உறுப்பினரின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஜான் பிரிட்டஸ், நாட்டிலுள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் பணியிடங்களுக்கான ஒட்டுமொத்த எண்ணிக்கை, காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து விளக்கம் கேட்டிருந்தார்.

இந்த கேள்விக்கு மத்திய இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக கடந்த பிப். 12 ஆம் தேதி பதிலளித்துள்ளார்.

தரவுகளின்படி, நாடு முழுவதும் ஐஏஎஸ் (6877), ஐபிஎஸ் (5099) மற்றும் ஐஎஃப்எஸ் (3193) ஆகிய பதவிகளுக்கு மொத்தம் 15,169 பணியிடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜனவரி 1, 2025 நிலவரப்படி, 2,834 பணியிடங்கள், அதாவது 18.6 சதவீதப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

தற்போதைய நிலவரப்படி, 5577 ஐஏஎஸ், 4,594 ஐபிஎஸ் மற்றும் 2,164 ஐஎஃப்எஸ் என மொத்தம் 12,335 அதிகாரிகள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மாநில வாரியாக காலிப் பணியிடங்கள் விவரம்

மாநில வாரியாக காலிப் பணியிடங்கள் விவரம்

மேலும், 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் இந்திய குடிமைப் பணிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 92% ஐஏஎஸ், 90% ஐபிஎஸ் மற்றும் 82% ஐஎஃப்எஸ் அதிகாரிகள் பொதுப் பிரிவினரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

ஐஏஎஸ்

ஓபிசி - 245 (4.39%)

எஸ்சி - 135 (2.42%)

எஸ்டி - 67 (1.2%)

ஐபிஎஸ்

ஓபிசி - 255 (5.5%)

எஸ்சி - 141 (3.06%)

எஸ்டி - 71 (1.54%)

ஐஎஃப்எஸ்

ஓபிசி - 231 (10.67%)

எஸ்சி - 95 (4.39%)

எஸ்டி - 48 (2.21%

Story image

முன்னதாக, நீதிபதிகள் நியமனங்கள் குறித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு, உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 80% பேர் பொதுப் பிரிவினர் என்று பதிலளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.