டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பினராயி விஜயன் மீண்டும் முதல்வர் ஆவார்! காங்கிரஸ் மூத்த தலைவர் பேச்சால் சர்ச்சை!

காங்கிரஸ் மூத்த தலைவர் பேச்சால் கேரள அரசியலில் விவாதம் ஏற்பட்டிருப்பது பற்றி...

News image
மணிசங்கர் அய்யர் | பினராயி விஜயன்- TNIE | B P Deepu
Updated On :16 பிப்ரவரி 2026, 5:44 am

இணையதளச் செய்திப் பிரிவு

கேரள முதல்வராக பினராயி விஜயன் மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் மாநில திட்டமிடல் துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய மணிசங்கர் அய்யர், பினராயி விஜயன் தலைமையிலான அரசை பாராட்டிய அதே சமயத்தில் தனது சொந்த கட்சியான காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார்.

கேரளத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றன.

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணிக்கு சற்று பின்னடைவாக அமைந்தது.

இந்த நிலையில், அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணிசங்கர் அய்யர் பேசியது கேரள அரசியலில் விவாதத்தை தூண்டியுள்ளது.

மணிசங்கர் அய்யர் பேசியதாவது:

”பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசின் பஞ்சாயத்து ராஜ்ஜியம் நாட்டுக்கே தலைமையாக உள்ளது. ராஜீவ் காந்தியின் தொலைநோக்குப் பார்வையை வேறு எந்த மாநிலத்தையும்விட கேரளம் திறம்பட நிறைவேற்றி வருகிறது.

நடைமுறைச் செயலாக்கத்தில் கேரளம் முதலிடத்தில் இருந்தாலும், சட்டப்பேரவை நடவடிக்கைகளில் கர்நாடகத்துக்கு அடுத்தபடியாக உள்ளது. பஞ்சாயத்து ராஜ்ஜியத்தை ஆதரிப்பதில் காங்கிரஸ் கைவிட்ட பொறுப்பை முதல்வர் ஏற்க வேண்டும். ஏழைகளுக்கான தேசம், வளர்ச்சியில் தீர்க்கமான குரலைக் கொண்டு மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கிய ஒரே மாநிலம் மார்க்சிஸ்ட் ஆட்சியின் கீழ் இருக்கும் கேரளம்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.