டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அசாமில் அவசர கால தரையிறங்கும் சாலையைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

அசாமில் முதல் அவசர கால தரையிறங்கும் சாலை பற்றி..

News image
அசாமில் உள்ள அவசர கால தரையிறங்கும் சாலை
Updated On :14 பிப்ரவரி 2026, 6:41 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஒருநாள் பயணமாக அசாமுக்கு வருகைத் தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அவசர காலத்தில் தரையிறங்கும் சாலையை இன்று திறந்து வைத்தார்.

சபுவா விமான நிலையத்தில் பிரதமரை ஆளுநர் லட்சுமண பிரசாத் ஆச்சார்யா, முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் மற்றும் மாநில அரசின் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.

திப்ருகரில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் உள்ள அவசர தரையிறங்கும் சாலையில் பிரதமர் நரேந்திர மோடி சி-130 விமானத்தில் தரையிறங்கியதால், அசாமில் இது ஒரு வரலாற்று தருணமாக மாறியது.

திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ. 100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.

அவசரக் காலத்தில் விமானங்கள், ஹெலிகாப்டர் உள்ளிட்டவை தரையிறங்கும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பிராந்தியத்தில் முதலாவது அவசர கால தரையிறங்கும் சாலை இதுவாகும்.

Story image

நெடுஞ்சாலையின் குறிப்பிட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பிரிவு இக்கட்டான சூழலின்போது போர் வீரர்கள் செல்வதற்கும், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கும் மாற்று ஓடுபாதையாக செயல்படும்.

தொலைதூரப் பகுதிகளில் மனிதநேய உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளின்போது இது முக்கிய பங்காற்றும்.

போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இடம்பெறும் இந்திய விமானப்படை (IAF) நடத்தும் 40 நிமிட வான்வழி காட்சியையும் பிரதமர் மோடி கண்டு களித்தார்.

அதன்பின்னர், அவர் சி-130 விமானத்தில் ELF-ல் இருந்து அவர் குவாஹாட்டிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

summary

Prime Minister Narendra Modi, who is on a one-day visit to Assam, today inaugurated the emergency landing strip.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.