டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கேரளத்தில் மகள் பாலியல் வன்கொடுமை: பின்னணியில் தந்தை! - கைது செய்து விசாரணை

உறவினர்களுக்கு வலைவீச்சு!

News image
- @TheKeralaPolice
Updated On :14 பிப்ரவரி 2026, 3:10 pm

இணையதளச் செய்திப் பிரிவு

கேரளத்தில் சொந்த மகளை அவரது தந்தையே 4 ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆலப்புழா மாவட்டத்தின் புன்னப்பறா பகுதியைச் சேர்ந்த சிறுமியொருவரை அவரது 8 வயது பருவத்தில் அவரது தாய்மாமன் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இந்தப் புகாரில் கைது செய்யப்பட்ட அந்த நபர் சிறையிலடைக்கப்பட்ட நிலையில், அதன்பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அதன்பின், அந்தச் சிறுமி குழந்தைகள் நலச் சங்கத்தின் ஒரு ஆசிரமத்தில் தங்கி சில ஆண்டுகள் வளர்ந்து வந்தார். இந்தச் சூழலில், கடந்த 2022-இல் அவரது தந்தை அவரை அங்கிருந்து அழைத்துச் சென்று தமது உறவினர் ஒருவரின் கண்காணிப்பில் வைத்து வீட்டில் வளர்த்து வந்தார்.

அங்கு, அவரது தந்தை மற்றும் உறவினர்கள் சிலர் அந்தச் சிறுமியை பல முறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். ஒருகட்டத்தில், தனக்கு இழைக்கப்படும் கொடுமைகளைச் சகித்துக்கொள்ள முடியாமல் வேதனையில் நடந்தவற்றையெல்லாம் தமது தோழி ஒருவரிடம் அழுது புலம்பியிருக்கிறார் அந்தச் சிறுமி. இதனைக் கேட்டு அதிர்ந்த அவர், தமது பெற்றோரிடம் சொல்லி போலீஸிடம் இது குறித்து அவர்கள் புகாரளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிந்த போலீஸார், அந்தச் சிறுமியின் தந்தை மற்றும் உறவினர் ஒருவரைக் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கொடுஞ்செயலில் தொடர்புடைய மேலும் இருவர் மாயமான நிலையில், அவர்களைக் கண்டுபிடிக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை(பிப். 14) தெரிவித்தனர்.

summary

Police said on Saturday that the father and cousin of a 14-year-old girl were arrested for sexually assaulting her over the years in this coastal district. two more persons are accused of sexually assaulting her at different times and are absconding.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.