டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியது பற்றி...

News image
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்- PTI
Updated On :12 பிப்ரவரி 2026, 6:41 am

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்கா - இந்தியா இடையே மேற்கொள்ளப்பட்டிருக்கும் வர்த்தக ஒப்பந்தத்துக்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஒப்பந்தமானது இந்தியாவுக்கு வைக்கப்பட்ட ’பொறி’ என்று விமர்சித்து, பதாகைகளுடம் எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் இணைந்து இன்று நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்பினர்.

தொழிலாளர்கள் சட்டத்திருத்தம், வர்த்தக ஒப்பந்தங்கள், தனியார்மயமாக்கல், தொழிலாளர் மற்றும் விவசாய விரோத கொள்கைகள் உள்ளிட்டவைக்கு எதிராக நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகின்றன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், இந்தியா - அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்டிருக்கும் வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் ஆளும்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளன.

மக்களவையில் புதன்கிழமை உரையாற்றிய ராகுல் காந்தி, “இந்தியாவையும் பாரத மாதாவையும் விற்றதில் வெட்கமாக இல்லையா?” என்று கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி நேற்று முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.