டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அதுதான் பிரதமரின் துணிச்சல்! விடியோ வெளியிட்ட அமைச்சருக்கு நன்றி! - ஜோதிமணி

அமைச்சர் கிரண் ரிஜுஜு வெளியிட்ட விடியோவுக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பதில்...

News image
கோப்புப் படம்
Updated On :11 பிப்ரவரி 2026, 7:37 am

இணையதளச் செய்திப் பிரிவு

விடியோவை வெளியிட்டு பொய்களை உடைத்ததற்கு அமைச்சர் கிரண் ரிஜுஜுவுக்கு நன்றி என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அப்போது சீன ஆக்கிரமிப்பு குறித்து பேசத் தொடங்கிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை.

இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த நிலையில் கடந்த பிப். 4 அன்று பெண் எம்.பி.க்கள், பிரதமரின் இருக்கைக்கு அருகில் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுதொடர்பாக விடியோ ஒன்றை அமைச்சர் கிரண் ரிஜுஜு வெளியிட்டுள்ளார்.

ஆனால், பிரதமரை தாக்க எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் முயன்றதாகவும் அதனால் பிரதமரை அவைக்கு வர வேண்டாம் என்று கூறியதாகவும், அவைத் தலைவர் ஓம் பிர்லா கூறியதுதான் இப்போது சர்ச்சையாகியுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் கிரண் ரிஜுஜு வெளியிட்டுள்ள விடியோ குறித்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறுகையில்,

"எங்களுக்கு எதிராக நிறைய அவதூறு பிரசாரம் இருந்ததால், இந்த விடியோவை வெளியிட்டதற்காக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஜிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்றத்தில் ஒரு விரும்பத்தகாத சம்பவம் நடந்திருக்கலாம் என்று அவைத் தலைவர் ஓம் பிர்லா கூறினார். ஆனால் அமைச்சர் கிரண் ரிஜுஜு வெளியிட்டுள்ள இந்த விடியோ மூலமாக அவைத் தலைவரின் கூற்று பொய்யாகிறது.

காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் எங்கள் கைகளில் ஒரு பதாகையைப் வைத்துக்கொண்டு முதல் வரிசை இருக்கைகளுக்குச் சென்றோம். நாங்கள் அமைதியாக அங்கு நின்று, பிரதமர் உரையாற்றுவதற்காகக் காத்திருந்தோம். அப்போது எதிர்க்கட்சித் தலைவருக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது.

பிரதமரைத் தாக்க முயற்சித்ததாக பாஜகவினர் கூறி வருகின்றனர். இந்த விடியோ அந்த பொய்யை உடைக்கிறது. அபையின் மரியாதை மற்றும் கண்ணியம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மீது பாஜக எம்.பி.க்கள், காகிதங்களைக் கிழித்து எறிந்து வீசிய விடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அப்படி நடந்தபோதிலும் டாக்டர் மன்மோகன் சிங் அவையில் தொடர்ந்து பேசினார். அதுதான் பிரதமரின் துணிச்சல்" என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.