டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பஞ்சாபின் மொஹாலியில் 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பஞ்சாபில் ஒரே நாளில் 16 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து...

News image
வெடிகுண்டு மிரட்டல் (கோப்புப் படம்)- IANS
Updated On :11 பிப்ரவரி 2026, 11:20 am

இணையதளச் செய்திப் பிரிவு

பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலி மாவட்டத்தில், ஒரே நாளில் 16 தனியார் பள்ளிகளுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

மொஹாலி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள 16 தனியார் பள்ளிகளுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் புதன்கிழமை (பிப். 11) மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பள்ளிகளில் இருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் அளிகப்பட்டது. காவல் துறையினரின் அறிவுறுத்தலின்படி அந்தப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அந்தப் பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர் குழுக்கள் மற்றும் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சோதனைகளின் முடிவில், 16 பள்ளிகளின் வளாகங்களில் சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருள்களும் கிடைக்காததால் இந்த மிரட்டல்கள் அனைத்தும் போலியானவை என உறுதி செய்யப்பட்டன.

இந்தச் சோதனை நடவடிக்கைகளில் 300-க்கும் அதிகமான காவல் துறை அதிகாரிகள் ஈடுபட்டதாகவும், மிரட்டல் விடுத்த மர்ம நபர்களைப் பிடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மொஹாலி காவல் துறை உயர் அதிகாரி ஹர்மந்தீப் சிங் ஹான்ஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

In Mohali district of Punjab, unidentified assailants issued bomb threats to 16 private schools in a single day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.