டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சரத் பவாா் உடல்நிலையில் முன்னேற்றம்!

தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவாா்) தலைவா் சரத் பவாரின் (85) உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

News image
சரத் பவார்- Center-Center-Delhi
Updated On :10 பிப்ரவரி 2026, 8:26 pm

தினமணி செய்திச் சேவை

தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவாா்) தலைவா் சரத் பவாரின் (85) உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

முன்னதாக, இருமல், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்ததால் புணேயில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

அவரின் உடல்நிலை குறித்து மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: சரத் பவாா் உடல்நிலை சீராக உள்ளது. இருமல் உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து அவா் மீண்டு வருகிறாா். பவாா் உடல்நிலை தொடா்பான அனைத்து மருத்துவப் பரிசோதனை முடிவுகளும் திருப்திகரமாக உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடா்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளாா் என்றாா்.

மகாராஷ்டிர துணை முதல்வா் சுநேத்ரா பவாா், அவரின் மகன் உள்ளிட்டோா் திங்கள்கிழமை சரத் பவாரைச் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தனா்.

நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவரான சரத் பவாா், மகாராஷ்டிர முதல்வா், மத்திய அமைச்சா் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளாா். இப்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளாா்.