டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மணிப்பூர்: உக்ரூல் மாவட்டத்தில் 5 நாள்களுக்கு இணையச் சேவை முடக்கம்!

மணிப்பூரில் இணையச் சேவைகள் முடக்கப்பட்டது பற்றி..

News image
இணையச் சேவை துண்டிப்பு
Updated On :10 பிப்ரவரி 2026, 7:39 am

இணையதளச் செய்திப் பிரிவு

மணிப்பூரில் உக்ரூல் மாவட்டத்தில் 5 நாள்களுக்கு இணையச் சேவைகள் தடை செய்ய மாநில அரசு உத்தரவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு திரும்பப்பெறப்பட்ட நிலையில், யும்நாம் கெம்சந்த் சிங் புதிய முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து குகி மற்றும் நாகா சமூகத்தினர் இடையே மீண்டும் போராட்டம் நிலவி வருகின்றது.

குகி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் உக்ரூல் மாவட்டத்தின் லிட்டன் கிராமத்தில் இரு பழங்குடியின சமூகத்தினரும் கல்வீசி தாக்கிக்கொண்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு டங்குல் நாகா சமூகத்தினரின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதில் குகி சமூகத்தினருக்கு தொடா்பிருக்கலாம் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதேசமயம் குகி சமூகத்தைச் சேர்ந்த சிலரது வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.

சிக்கிபங் கிராமவாசிகள் லிட்டன் கிராமத் தலைவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் லிட்டன் காவல் நிலையத்தின் மீதும் அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

உக்ருல் மாவட்டத்தில் ஐந்து நாள்களுக்கு இணையச் சேவைகள் நிறுத்திவைக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதில் பிராட்பேண்ட், விபிஎன் மற்றும் விசட் சேவைகள் அடங்கும்.

நூற்றுக்கணக்கான குகி மற்றும் டாங்ஹுல் நாகா கிராமத்தினர், பெரும்பாலான பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடந்த இரண்டு நாள்களாக லிட்டன் சரேய்கோங் மற்றும் குகி கிராமங்களை விட்டு காங்போக்பி மற்றும் உக்ரூல் மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பிச் சென்று வருவதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

இதனால் லிட்டன், சிக்கிபங் ஆகிய பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவுவதால் அங்குப் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.