ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மேற்கு வங்கத்தில் ஒரே மாவட்டத்தில் 90 எச்ஐவி பாதிப்புகள் உறுதி!

மேற்கு வங்கத்தின் கிழக்கு பர்தமான் மாவட்டத்தில் 90 எச்ஐவி பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது குறித்து...

News image
கோப்புப் படம் - PTI
Updated On :10 பிப்ரவரி 2026, 12:32 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மேற்கு வங்க மாநிலத்தின் கிழக்கு பர்தமான் மாவட்டத்தில் சுமார் 90 பேருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு பர்மான் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வசித்து வரும் சுமார் 90 பேருக்கு எச்ஐவி பாதிப்புகள் ஏற்பட்டு அங்கு பெரும் சுகாதார அச்சுறுத்தல் உருவாகியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரபல மருத்துவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மூத்த கார்பரேட் அதிகாரிகள் ஆகியோர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து, அவர்கள் பணியாற்றும் இடங்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கிழக்கு பர்தமான் மாவட்டத்தில் 50 எச்ஐவி பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது 90 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பாதுகாப்பற்ற முறையில் உறவு கொண்ட தன்பாலினச் சேர்கையாளர்களிடம் இந்தப் பாதிப்புகள் அதிகம் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும், இந்த நோய் பரவிய வழிகள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களில் சிலர் சமூக ஊடகங்களின் வழியாக இணைந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், எச்ஐவி பாதிப்புகள் குறித்து கிழக்கு பர்தமான் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக, தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி ஜெயராம் ஹெம்பிரோம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.