டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கான்பூரில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் கற்கள் வீச்சு

கான்பூரில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் கற்கள் வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

News image
கோப்புப் படம்
Updated On :9 பிப்ரவரி 2026, 7:31 am

தினமணி செய்திச் சேவை

கான்பூரில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் கற்கள் வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியிலிருந்து காசி மகாகல் எக்ஸ்பிரஸ் ரயில் இந்தூர் நோக்கி ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது. பீம்சென் ரயில் நிலையம் அருகே இரவு 9 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் அதன் மீது கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் ரயிலின் முதல் ஏசி பெட்டி ஜன்னல் கண்ணாடி உடைந்தது. இருப்பினும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவத்தின் விடியோ சமூகஇணையதளங்களில் வெளியானது. விடியோவில், உடைந்த கண்ணாடி தரையில் கிடப்பதைக் காணலாம். பீம்சென் நிலைய அதிகாரி ஹேமந்த் கூறுகையில், இந்த சம்பவம் ஒரு தவறான செயல்.

இதுவரை பெரிய சதித்திட்டம் எதுவும் கண்டறியப்படவில்லை என்றார். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது ரயில்வே பாதுகாப்புப் படை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டறிந்து கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரி தெரிவித்தார்.

summary

Unidentified persons allegedly pelted stones at the Kashi Mahakal Express near Bhimsen railway station here, damaging a window of a First AC coach and causing panic among passengers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.