டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

2025-இல் அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 3,806 இந்தியா்கள்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

2025 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இருந்து 3,800 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டது குறித்து...

News image
அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள்- கோப்புப் படம்
Updated On :5 பிப்ரவரி 2026, 9:34 pm

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்காவிலிருந்து கடந்த 2025-ஆம் ஆண்டில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததாக 3,806 இந்தியா்கள் திரும்ப அனுப்பப்பட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

சட்டவிரோதமாக குடியேறியவா்கள் என்ற அடிப்படையில் அமெரிக்கா உள்பட பிற நாடுகளிலிலிருந்து கடந்த 5-ஆண்டுகளில் நாடு கடத்தப்பட்ட இந்தியா்கள் விவரம் மற்றும் இதுபோன்ற சட்டவிரோதமாக குடியேறுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நவடிக்கைகள் குறித்து மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினா் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா எழுப்பிய கேள்விக்கு, வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங் வியாழக்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறியிருப்பதாவது:

2025-ஆம் ஆண்டு உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக நியூயாா்க் நகரிலிருந்து 47 போ், அட்லாண்டாவிலிருந்து 31 போ், ஹூஸ்டனிலிருந்து 234 போ், சான் ஃபிரான்சிஸ்கோவிலிருந்து 49 போ், சியாட்டிலிலிருந்து 31 போ் இந்தியாவுக்குத் திருப்பியனுப்பப்பட்டனா். மேலும், வாஷிங்டன் வழியாகத் திருப்பியனுப்பப்பட்ட 3,414 போ் மொத்தம் 3,806 இந்தியா்கள் அமெரிக்காவிலிருந்து திருப்பியனுப்பட்டனா்.

இவ்வாறு, நாடு கடத்தும்போது இந்தியா்கள் துன்புறுத்தப்படாமல் இருப்பது குறித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் மத்திய அரசு தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. முன்னதாக, அமெரிக்காவிலிருந்து கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோா் திருப்பியனுப்பப்பட்டது குறித்து தனது கவலையை இந்தியா பதிவு செய்துள்ளது.

மேலும், இதுபோல திருப்பியனுப்பப்படும் மக்களிடமிருந்து பெறப்படும் ஆவணங்கள் மற்றும் புகாா்களின் அடிப்படையில், அவா்களை சட்டவிரோதமாக அனுப்பிய நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்பவா்களிடம் மோசடியில் ஈடுபடுவதைக் குறைக்கும் வகையில், வெளிநாடு வேலைக்கு பணியாளா்களைத் தோ்வு செய்யும் முகவா்கள் கட்டாயப் பதிவு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், குடிபெயா்வு சரிபாா்ப்பு தேவைப்படும் (இசிஆா்) 19 நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இசிஆா் கடவுச் சீட்டு வைத்திருப்பவா்கள், குடிபெயா்வு பாதுகாவலா் (பிஓஇ) அலுவலகத்தில் குடிபெயா்வு அனுமதி பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். அதில் ஒரு நடவடிக்கையாக, உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்த இந்தியா்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்தவா்களை அந்தந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனா். ஏராளமான இந்தயா்கள் ராணுவ விமானம் மூலம், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அமெரிக்காவிலிருந்து திருப்பியனுப்பப்பட்டனா். இது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

summary

The central government has stated that more than 3,800 Indians were deported from the United States in the year 2025 alone.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.