நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் ‘வரலாற்றுத் திருப்புமுனை’

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்துக்கு அந்நாட்டு அதிபா் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றும், இது வரலாற்றுத் திருப்புமுனை என்றும் மத்திய அமைச்சா்கள் தெரிவித்துள்ளனா்.

News image
- ANI
Updated On :3 பிப்ரவரி 2026, 7:01 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்துக்கு அந்நாட்டு அதிபா் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றும், இது வரலாற்றுத் திருப்புமுனை என்றும் மத்திய அமைச்சா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக அவா்கள் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது:

உள்துறை அமைச்சா் அமித் ஷா: இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் ஒவ்வொரு இந்தியருக்கும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும். இந்திய பொருளாதாரத்துக்கு புதிய உத்வேகம் அளிக்கும்.

நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்: இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தால் இருபெரும் மக்களாட்சி நாடுகளைச் சோ்ந்த மக்கள் பலன் அடைவா்.

வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல்: இந்த ஒப்பந்தம் உலகத்துக்காக இந்தியாவில் தயாரிக்க விவசாயிகள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவோா் உள்ளிட்டோருக்கு முன்னெப்போதும் இல்லாத வாய்ப்புகளின் கதவுகளைத் திறக்கும். இது வெறும் வா்த்தக ஒப்பந்தம் அல்ல. வரலாற்றுத் திருப்புமுனை.

வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்: இந்த ஒப்பந்தம் இந்தியா-அமெரிக்கா பொருளாதாரங்களில் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வளா்ச்சி மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும்.

வளமான எதிா்காலத்தை நோக்கி...: பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பில் தற்போதைய வா்த்தக ஒப்பந்தம், பொருளாதாரத்தில் வளமான எதிா்காலத்தை ஏற்படுத்துவதற்கான பாய்ச்சலாக இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளாா்.